AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நோ தியேட்டர்… நேரடியாக ஓடிடியில் வெளியாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் படம்!

Actress Keerthy Suresh: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் உருவாகியுள்ள படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி உப்பு புளி காரம் என்ற கீர்த்தி சுரேஷின் படம் ஜூலை மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நோ தியேட்டர்… நேரடியாக ஓடிடியில் வெளியாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் படம்!
உப்பு புளி காரம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Jun 2025 15:44 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் (Actress Keerthy Suresh) நடிப்பில் தெலுங்கு சினிமாவில் உருவாகியுள்ள படம் உப்பு கப்புறம்பு (Uppu Kappurambu). இயக்குநர் அனில் இயக்கியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க நடிகர் சுஹாஸ் நாயகனாக நடித்துள்ளார். இவர்கள் உடன் இணைந்து நடிகர்கள் பாபு மோகன், சத்ரு, தல்லூரி ராமேஸ்வரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான எல்லானார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ராதிகா லாவு தயாரித்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீடு குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள உப்பு கப்புறம்பு படம் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகின்றது. இதனால் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது ரசிகரக்ளிடையே கவனம் ஈர்த்து வருகின்றது.

உப்பு கப்புறம்பு படத்தின் வெளியீடு குறித்து அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிட்ட பதிவு:

மேலும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் காணக் கிடைக்கும் என்றும் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மூட நம்பிகையில் 90களில் இருக்கும் கிராம மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது குறித்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இறுதியாக இந்தியில் பேபி ஜான் படம் வெளியான பிறகு எந்தப் படமும் இதுவரை வெளியாகாமல் இருந்த நிலையில் இந்தப் படத்தில் அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உப்பு கப்புறம்பு படம் குறித்து இயக்குநரின் பேச்சு:

இந்தப் படம் குறித்து இயக்குநர் அனில் பேசியபோது 90-களில் வாழ்ந்த கிராம மக்கள் தங்களின் வாழ்க்கையில் பல அசாதாரண நம்பிக்கையை கடைபிடித்து வர்ந்தனர். அதனை சுற்றி இருந்த மூட நம்பிக்கைகள் மற்றும் காமெடியை மையமாக வைத்து இந்த உப்பு கப்புறம்பு படம் உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடியாக சில சீரியசான விசயங்களை கூறியிருப்பதாகவும் இயக்குநர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us