AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டெல்லியின் அடையாளமாக மாறிய அக்ஷர்தாம் கோவில்… 25 ஆண்டுகளை நிறைவு செய்த பிரமாண்ட ஆன்மிகச் சின்னம்!

இந்தியாவின் தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழும் அக்ஷர்தாம் கோவில் தனது வரலாற்றில் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. தற்போது 20 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லியின் மிக முக்கிய ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியின் அடையாளமாக மாறிய அக்ஷர்தாம் கோவில்… 25 ஆண்டுகளை நிறைவு செய்த பிரமாண்ட ஆன்மிகச் சின்னம்!
அக்ஷர்தாம் கோவில்
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Jul 2026 21:44 PM IST

இந்தியாவின் தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழும் அக்ஷர்தாம் கோவில் தனது வரலாற்றில் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த 2001 ஜூலை 2 ஆம் தேதி, யமுனை நதிக்கரையில் இந்த பிரமாண்ட கோவிலின் அடிக்கல் நாட்டப்பட்டு முதல் சிற்பக்கல் அமைக்கப்பட்டது. அதன்பின் நான்கு ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, 2005 ஆம் ஆண்டு பொதுமக்களின் பார்வைக்காக கோவில் திறக்கப்பட்டது.

பகவான் சுவாமிநாராயணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்

தற்போது 20 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லியின் மிக முக்கிய ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவில் 19ஆம் நூற்றாண்டின் ஆன்மிகத் தலைவர் பகவான் சுவாமிநாராயணருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த சிற்பங்கள் இந்திய கலாசாரம், ஆன்மிகம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அக்ஷர்தாம் வளாகத்தில் சமீபத்தில் 108 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. சிறுவயது துறவி வடிவில் பகவான் சுவாமிநாராயணரின் இந்த சிலை, இரு கைகளையும் பக்தி உணர்வுடன் உயர்த்திய நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

கோவிலின் பின்புறத்தில் இருந்து இந்த சிலையை பார்க்கும்போது, சிலையின் பின்னணியில் அக்ஷர்தாம் கோவில் காட்சியளிப்பது பார்வையாளர்களை வெகுவாக கவரும் காட்சியாக உள்ளது. வாரணாசி, புவனேஸ்வர் போன்ற நகரங்களைப் போல டெல்லியில் தொன்மையான இந்து கோவில்கள் அதிகம் இல்லை. காரணம், 1206 முதல் 1857 வரை டெல்லி முகலாயர்களின் ஆட்சியில், கோட்டைகள், மசூதிகள் மற்றும் சூஃபி தர்காக்கள் போன்ற கட்டிடங்களே அதிகமாக உருவாக்கப்பட்டன.

இதனால், டெல்லியின் பெரும்பாலான பிரமாண்ட இந்து கோவில்கள் கடந்த நூற்றாண்டில்தான் கட்டப்பட்டவை. டெல்லியின் மிக அழகான கோவில்களில் ஒன்றாக ஸ்ரீ லட்சுமி நாராயண் கோவில் கருதப்படுகிறது. விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில், 1939ஆம் ஆண்டு மகாத்மா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது. பிர்லா குடும்பம் கட்டிய இந்த ஆலயம், அதன் பிரமாண்ட கட்டிடக்கலை, அமைதியான சூழல் மற்றும் பளிங்கு கற்களில் செதுக்கப்பட்ட தெய்வ உருவங்களுக்காக புகழ்பெற்றது.

ஜெகந்நாதர் கோவில் மற்றும் இஸ்கான் கோவில்

1970களில் கட்டப்பட்ட ஸ்ரீ ஜெகந்நாதர் கோவில், முழுவதும் வெள்ளை நிறத்தில் அமைந்துள்ளதால் டெல்லியின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. அதேபோல், இஸ்கான் கோவில், பழுப்பு நிற தோல்பூர் கல் மற்றும் வெள்ளை பளிங்கால் கட்டப்பட்டு, 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவான முக்கிய கோவில்களில் ஒன்றாகும்.

டெல்லியின் முக்கிய சுற்றுலா தலம்

இன்று அக்ஷர்தாம் கோவில், ஒரு வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், டெல்லியின் முக்கிய சுற்றுலா மையமாகவும் விளங்குகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் நொய்டா மோர் பகுதியில் இருந்து சூரிய அஸ்தமனத்தின் பின்னணியில் அக்ஷர்தாம் கோவிலின் கோபுரம் தெரியும் காட்சி, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அழகிய தருணமாக கருதப்படுகிறது.

இந்திய கட்டிடக்கலையின் பெருமை

இந்திய பாரம்பரியம், ஆன்மிகம் மற்றும் நவீன கட்டிடக்கலையை ஒருங்கிணைக்கும் அரிய படைப்பாக அக்ஷர்தாம் கோவில் திகழ்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் கோடிக்கணக்கான பக்தர்களையும், உலகம் முழுவதிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வரும் இந்த கோவில், டெல்லியின் கலாசார அடையாளங்களில் ஒன்றாக தொடர்ந்து விளங்கி வருகிறது.

Follow Us