AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருமணத்துக்கு அலங்கரிக்கப்பட்ட மின்சார விலக்கால் வந்த ஆபத்து.. தந்தையை காப்பாற்ற சென்ற புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!

Newly Married Man Died By Electric Shock | தெலங்கானாவில் திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்ட மின்சார விலக்குகளில் இருந்து மின்சாரம் கசிந்த நிலையில், புதுமாப்பிள்ளை மற்றும் அவரது தந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்துக்கு அலங்கரிக்கப்பட்ட மின்சார விலக்கால் வந்த ஆபத்து.. தந்தையை காப்பாற்ற சென்ற புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Jul 2026 20:48 PM IST

நகரி, ஜூலை 02 : தெலங்கானாவில் (Telangana) தந்தையை காப்பாற்ற முயன்ற புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்காக வீட்டை அலங்கரிக்க பயன்படுத்திய மின்விலக்கு அலங்காரத்தில் இருந்து மின்சாரம் கசிந்த நிலையில், இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலி – சோக சம்பவம்

தெலங்கானா மாநிலம், அனுமகொண்டா மாவட்டம், பீமாரத்தை சேர்ந்தவர் சாம்பையா. 62 வயதாகும் அவருக்கு மூன்று மகன்கள் இருந்துள்ளனர். அவரது இளையமகன் சரத் என்ற 32 சயது நபருக்கு ஜூன் 24, 2026 அன்று திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்துக்காக மின்சார விலக்குகள் பயன்படுத்தப்பட்டு இருந்த நிலையில், அந்த மின்சார விலக்குகளில் இருந்து மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் ‘பயனர் பெயர்’ வசதி.. சைபர் மோசடி அபாயம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு..

தந்தையை காப்பாற்ற முயன்ற புதுமாப்பிள்ளைக்கு நடந்த சோகம்

மழை பெய்ய தொடங்கிய நிலையில், சாம்பையாவும், சரத்தும் மாடிக்கு ஏறிச் சென்றுள்ளனர். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக சாம்பையா அங்கிருந்த மின்சார வயரை தொட்டுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சரத், தந்தையை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது சரத் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க : எரிபொருள் மீதான தற்காலிக கட்டுப்பாடுகள் நீக்கம்.. மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் முடிவு – மத்திய அமைச்சர் அறிவிப்பு

விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை

திருமணம் முடிந்த கையோடு தந்தையும், மகனும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us