கொடூரத்தின் உச்சம்.. பெங்களூரு டே-கேரில் குழந்தைகளை வாஷிங் மெஷினில் அடைத்து வைத்து சித்திரவதை.. அதிர்ச்சி வீடியோ..
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கேப்ஜெமினி நிறுவனத்தின் HAL வளாகத்தில் செயல்பட்டு வந்த டே-கேர் மையத்தில் பணியாற்றிய மஞ்சுளா, விஜயலட்சுமி, சிந்து, பவானி மற்றும் பிந்து ஆகியோர் மீது குழந்தைகளை துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், குழந்தைகள் அழும்போது அவர்களை சலவை இயந்திரத்தின் டிரம்முக்குள் அமர வைத்து, அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஜூலை 2, 2026: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் டே-கேர் மையத்தில், 2 முதல் 3 வயது வரையிலான குழந்தைகள் மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தப்பட்டதாக வெளியான வீடியோக்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பெண் பராமரிப்பாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சலவை இயந்திரத்துக்குள் குழந்தைகளை அமர வைத்த கொடூரம்:
தகவலின்படி, தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கேப்ஜெமினி நிறுவனத்தின் HAL வளாகத்தில் செயல்பட்டு வந்த டே-கேர் மையத்தில் பணியாற்றிய மஞ்சுளா, விஜயலட்சுமி, சிந்து, பவானி மற்றும் பிந்து ஆகியோர் மீது குழந்தைகளை துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், குழந்தைகள் அழும்போது அவர்களை சலவை இயந்திரத்தின் டிரம்முக்குள் அமர வைத்து, அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், சில குழந்தைகளை கழிவறைக்குள் அடைத்து வைத்து தண்டித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Also Read: இ20 பெட்ரோல் குறித்து மத்திய அரசு கொடுத்த புதிய விளக்கம்.. கவனிக்க வேண்டியவை என்ன தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் வீடியோ:
Children between two and three years old made to sit in the drum of a front-loading washing machine, water sprayed into their mouths with a toilet jet spray, and locked in bathrooms – these were the inhuman punishments allegedly meted out at a daycare centre in Bengaluru.
A case… pic.twitter.com/H6SK7Xe3Tt
— Hate Detector 🔍 (@HateDetectors) July 1, 2026
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில், ஒரு சிறு குழந்தையை கழிப்பறையில் அமர வைத்து, கழிவறை ஜெட் ஸ்ப்ரே மூலம் வாயில் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. குழந்தை கதறி அழுதபோதும், அதைப் பொருட்படுத்தாமல் பராமரிப்பாளர் நடந்து கொண்டது காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் உரிமைகள் ஆணையமும் விசாரணை:
இந்த டே-கேர் மையத்தில், கேப்ஜெமினி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்தனர். மேலும், கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திலும் தனி புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
டே-கேர் மையம் தற்காலிகமாக மூடல்:
வைரலான வீடியோவால் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, கேப்ஜெமினி நிறுவனம் அந்த டே-கேர் மையத்தை தற்காலிகமாக மூடியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் தொடர்பாக முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், டே-கேர் மையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு தரநிலைகள் குறித்து மீண்டும் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.