AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாமியாரின் இறுதி சடங்கில் மருமகனுக்கு நடந்த சோகம்.. ஆற்றில் கடித்து இழுத்துச் சென்ற முதலை!

Man Dragged Inside The River By Crocodile | உத்தர பிரதேசத்தில் தீபக் என்ற நபர் தனது மாமியாரின் இறுதி சடங்கை முடித்துவிட்டு ஆற்றில் கை, கால்களை கழுவியுள்ளார். அப்போது ஆற்றில் இருந்து முதலை அவரை கடித்து உள்ளே இழுத்துச் சென்றுள்ளது.

மாமியாரின் இறுதி சடங்கில் மருமகனுக்கு நடந்த சோகம்.. ஆற்றில் கடித்து இழுத்துச் சென்ற முதலை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Jul 2026 23:13 PM IST

லக்னோ, ஜூலை 01 : உத்தர பிரதேசத்தில் (UP – Uttar Pradesh) மாமியாரின் இறுதி சடங்கை முடித்துவிட்டு ஆற்றில் குளிக்க முயன்ற இளைஞரை, முதலை கடித்து இழுத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளத்தில் குளிக்க வேண்டாம் என கிராம மக்கள் எச்சரித்த நிலையில், அந்த நபர் குளத்தில் இறங்கியதன் காரணமாக இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாமியாரின் இறுதி சடங்கில் பங்கேற்ற நபருக்கு நடந்த சோகம்

உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் தீபக் சர்மா. இவரது மனைவியின் தாயார் உயிரிழந்த நிலையில், அவரது இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக கோண்டா மாவட்டத்தில் உள்ள உம்ரி என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணின் உடலை தகனம் செய்ய அவர்கள் ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து உடலையும் அவர்கள் தகனம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க : அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு.. அவசர விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு

ஆற்றில் இருந்து கடித்து இழுத்துச் சென்ற முதலை

மாமியாரின் உடலை தகனம் செய்த நிலையில், தீபக் அங்குள்ள ஆற்றில் இறங்கியுள்ளார். அவரை இறங்க வேண்டாம் என்று அங்கிருந்த பொதுமக்கள் எச்சரித்துள்ளனர். ஆனால், அதனை பொருட்படுத்தாத அவர் ஆற்றுக்குள் இறங்கியுள்ளார். அப்போது ஆற்றில் இருந்த முதலை அவரை கடித்து இழுத்துச் சென்றுள்ளது. அதனை கண்டு கடும் அதிர்ச்சி உள்ளான கிராம் மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க : மொரிஷியஸ் பிரதமரை சந்தித்த பிரதமர் மோடி.. கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆலோசனை!

மீட்பு துறையினர் உடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீபக்கின் உடலை தேடும் பணியில் ஈடுப்ட்டு வருகின்றனர். அவரது உடல் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us