AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அணுக்கனிம சுரங்க விவகாரம்.. தவெக அரசின் இரட்டை வேடத்தை தோலுரித்த எடப்பாடி பழனிசாமி!

Edappadi Accused TVK Government: அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு இரட்டை வேடம் போடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். தவெக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி.

அணுக்கனிம சுரங்க விவகாரம்.. தவெக அரசின் இரட்டை வேடத்தை தோலுரித்த எடப்பாடி பழனிசாமி!
தவெக அரசு இரட்டை வேடம் போடுகிறது
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 01 Jul 2026 21:21 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் அருகே 1.144 ஹெக்டேர் நிலப்பரப்பில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்த திட்டத்துக்கான ஒதுக்கீட்டு ஆணையை மேலும் ஓராண்டு நீட்டித்து தவெக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தத் திட்டத்தை கடந்த 2024- ஆம் ஆண்டு நடைபெற்ற தவெக கட்சி செயற்குழு கூட்டத்தில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் இந்த திட்டத்தை தென் தமிழகத்தை பாழ்படுத்தும் முயற்சி என்று குறிப்பிடப்பட்டுள்ள தவெக கட்சி இதனை அபாயம் விளைவிக்கும் நாசகார நச்சு திட்டம் என்று கூறி இதனை கைவிட வலியுறுத்தி உள்ளது. தற்போது அந்த நிலைப்பாட்டில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நாசக்கார நச்சு திட்டம் நன்மை பயக்குமா

ஆட்சிக்கு வருவதற்கு முன் நாசக்கார நச்சுத் திட்டமாக இருந்தது தற்போது நன்மை பயக்கும் நலத்திட்டம் ஆகிவிட்டதா. எதற்கு தவெக அரசு இரட்டை வேடம் போடுகிறது. மேலூர் அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பி, பல ஆதாரபூர்வமான கேள்விகளை அரசுக்கு எதிராக கேட்டு மக்களுக்காக நான் நின்றுள்ளேன். மக்கள் பிரச்சினைகளுக்கு உயிரைக் கொடுத்து காப்பாற்றுவோம் என்று சட்டப்பேரவையில் முழக்கமிட்டுள்ளேன். இந்த வரலாற்றை தற்போதைய ஆட்சி காரர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் படிக்க: தவெக தலைமையில் புதிய கூட்டணி.. விரைவில் பெயர்.. ஒருங்கிணைப்பாளர் நியமனம்!

சோபா கூட்டணிக்குள் நுழைக்கும் செயல்

அடுத்த கட்சிகளின் எம்எல்ஏக்களை வலை வீசி, குதிரை பேரம் பேசி இருப்பதற்கும், கல்லாப்பெட்டி கூட்டணி என்று தேர்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம் தங்கள் சோபா கூட்டணிக்குள் நுழைப்பதற்கும் இடையே இப்படி ஒரு அரசாணை வெளியிட்டால் அதனை கண்டு கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தீர்களா முதல்வரே. தமிழக மக்களுக்கான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து, மக்களிடம் எப்போது மட்டும்தான் அதிமுகவின் ஒரே பணி ஆகும். இது ஒரு நாளும் மாறாது.

முதல் அமைச்சர் ஜோசப் விஜய் விளக்க வேண்டும்

நச்சு திட்டம் என்று இன்றைய ஆளும் கட்சி சொன்ன திட்டத்தை தற்போது செயல்படுத்த முனைவது குறித்த காரணத்தை முதல்வர் ஜோசப் விஜய் விளக்க வேண்டும். உண்மையிலேயே அது நச்சு திட்டம் தான் என்றால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: இரவு நேரத்தில் அத்துமீறிய மாமனார்.. அலறிய மருமகள்.. செங்கல்பட்டை உலுக்கிய தற்காப்பு கொலை!

Follow Us