அதிமுகவில் வளர்மதி பதவி பறிப்பு.. எடப்பாடி கே. பழனிசாமி அதிரடி உத்தரவு!
AIADMK Former Minister Valarmathi : அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் அமைப்பு செயலாளர் பதவியை பறித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
அதிமுகவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில், இந்த கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்ததுடன், அந்தக் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். மேலும், 2 எம்எல்ஏக்கள் இணைய உள்ளதாக அவர்களே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அதிமுகவின் அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து வரும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த வளர்மதி அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் நாளை ( வியாழக்கிழமை) ஜூலை 2- ஆம் தேதி இணைய இருப்பதாக தகவல் வெளியானது.
அதிமுகவில் வளர்மதி பதவி பறிப்பு
இந்த நிலையில், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் அமைப்பு செயலாளர் பதவியை பறித்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து வரும் திருச்சி புறநகர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி இன்று புதன்கிழமை முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: மதுரையில் நடுரோட்டில் பயங்கரம்.. திமுக பிரமுகர் வெட்டி சாய்ப்பு.. அலறிய நண்பர்.. தப்பியோடிய கும்பலைத் தேடும் போலீஸ்!




பிற்படுத்தப்பட்டோர் துறை முன்னாள் அமைச்சர்
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த எஸ். வளர்மதி கடந்த 2016- ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. இவர், ஸ்ரீரங்கம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போதும், அந்த மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
நாளை தவெகவில் இணையும் முன்னாள் அமைச்சர்கள்
அந்த வகையில், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா, அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா, விராலிமலை எம்எல்ஏ விஜயபாஸ்கர், கரூர் எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்ததுடன் அதிமுகவிலிருந்து அதிரடியாக விலகி உள்ளனர். இவர்களில், 4 பேர் தவெகவில் இணைந்துள்ளனர். இரு விஜயபாஸ்கர் நாளை தவெகவில் இணைய உள்ளனர். இவர்களுடன் முன்னாள் அமைச்சர் வளர்மதி இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக, அவரது பதவியை எடப்பாடி பறித்துள்ளார்.
மேலும் படிக்க :நெருங்கும் வாரவிடுமுறை… சொந்த ஊர் செல்ல ரெடியா.. தயார் நிலையில் 1,475 சிறப்பு பேருந்துகள்!