தவெக தலைமையில் புதிய கூட்டணி.. விரைவில் பெயர்.. ஒருங்கிணைப்பாளர் நியமனம்!
TVK Alliance Parties Meeting: தமிழக வெற்றி கழகம் தலைமையில் அமைந்த புதிய கூட்டணிக்கு விரைவில் பெயர் அறிவிக்க இருப்பதாகவும், ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட இருப்பதாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பல்வேறு விவரங்களை இந்தப் பதிவில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
தமிழக வெற்றிக் கழக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை அருகே உள்ள கோவளத்தில் இன்று புதன்கிழமை ( ஜூலை 1) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு முதல்வர் ஜோசப் விஜய் தலைமை வகித்தார். இதில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் பங்கேற்று இருந்தன. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கூட்டணியை அடுத்த கட்டத்துக்கு எவ்வாறு எடுத்துச் செல்வது, ஊழல் இல்லாத ஆட்சியை மக்களுக்கு வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வமான விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழக வெற்றி கழகம் தலைமையில் அமைந்துள்ள புதிய கூட்டணிக்கு பெயர் வைப்பது மற்றும் கூட்டணியை ஒருங்கிணைப்பதற்கு ஒருங்கிணைப்பாளர் நியமனம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டன.
தவெக கூட்டணிக்கு புதிய பெயர்- ஒருங்கிணைப்பாளர்
இதில், முதல்வர் ஜோசப் விஜய் தவெக கூட்டணிக்கான பெயரை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும், இந்த பெயரை கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரையும் தேர்வு செய்து விரைவில் அறிவிப்பதாக முதல்வர் விஜய் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான வைகோ, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி எம்பி, பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேலும் படிக்க: தவெக ஆட்சி கவிழ்ப்பு விவகாரம்.. கைதான 3 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல்..!




3 முக்கிய விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை
தமிழகத்தில் அமைந்துள்ள புதிய அரசு ஊழல் இல்லாத ஆட்சியை மக்களுக்கு வழங்குவதாக உறுதி பூண்டு உள்ளது. தற்போது நடைபெற்ற தோழமை கட்சிகள் கூட்டமானது, தோழமையாக நடைபெற்றுள்ளது. இந்த கூட்டணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். மேலும், இந்த கூட்டத்தில்,
- கூட்டணி கட்சிகள் இடையே ஒருங்கிணைப்பு.
- குறைந்தபட்ச செயல் திட்டம்.
- புதிய கூட்டணிக்கான பெயர்.
3 முக்கிய முடிவுகள் குறித்து விரைவில் அறிவிப்பு
ஆகிய 3 விஷயங்கள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. இந்த 3 முக்கிய விஷயங்கள் தொடர்பாக விரைந்து முடிவு எடுக்கப்பட்டு, அடுத்த நடைபெறும் தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசும், புதிய கூட்டணியும் அமைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் எம்பிக்களை பெற்றதும் இந்தியா கூட்டணியில் இணைவார்கள் என்று தெரிவித்தனர்.
மேலும் படிக்க: நெருங்கும் வாரவிடுமுறை… சொந்த ஊர் செல்ல ரெடியா.. தயார் நிலையில் 1,475 சிறப்பு பேருந்துகள்!