மதுரையில் நடுரோட்டில் பயங்கரம்.. திமுக பிரமுகர் வெட்டி சாய்ப்பு.. அலறிய நண்பர்.. தப்பியோடிய கும்பலைத் தேடும் போலீஸ்!
Thirumangalam DMK Functionary Murder: மதுரை மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி ஒருவர் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து அந்த கும்பலை வலை வீசி தேடி வருகிறது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி பகுதியில் உள்ள இலுப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கலாநிதி. திமுக நிர்வாகியான இவர், தனது இருசக்கர வாகனத்தில் அஜித் என்பவருடன் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காரின் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் கலாநிதியை வழிமறித்து அவரை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இந்த கொடூர தாக்குதலில் பலத்த காயமடைந்த திமுக நிர்வாகி கலாநிதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தடுக்க முயன்ற அவரது நண்பர் அஜித்துக்கும் பலத்த வெட்டு காயம் விழுந்தது. இந்த கொலை சம்பவத்தை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அஜித்தை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளின் படி விசாரணை
மேலும், கொலை செய்யப்பட்ட கலாநிதியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், கலாநிதியின் குடும்பத்தினரிடமும், அவரது நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இது தொடர்பாக கலாநிதி குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: கோவையில் அராஜகம்.. நடுரோட்டில் முட்டி மோதி நின்ற தனியார் பேருந்துகள்.. பயணிகள் மரண பயம்!!




குற்றவாளிகளை கைது செய்யகோரி சாலை மறியல்
அதில், கொலை கும்பலின் உருவம் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட கும்பலை போலீசார் தொடர்ந்து வலை வீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, திமுக நிர்வாகி கலாநிதி கொலை செய்த கும்பலை உடனடியாக கைது செய்ய கோரி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன் கிளி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கொலை குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதி அளித்ததை அடுத்து, அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
மேலும் படிக்க: தவெக ஆட்சி கவிழ்ப்பு விவகாரம்.. கைதான 3 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல்..!