AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக பாதையில் தவெக அரசும் பயணிக்கிறதா? அரசின் இந்த போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் – அண்ணாமலை..

சமூக வலைதளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம்தான். ஆனால், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்,

திமுக பாதையில் தவெக அரசும் பயணிக்கிறதா? அரசின் இந்த போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் – அண்ணாமலை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Aug 2026 17:03 PM IST

ஆகஸ்ட் 18, 2026: திமுக ஆட்சியின் பாதையில் தமிழக வெற்றிக் கழக அரசும் பயணிக்கிறதா என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ஆளும் கட்சியை விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்கு… திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான்.

திமுக பாதையில் தவெக அரசும் பயணிக்கிறதா?


அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சமூக வலைதளங்களில் உங்கள் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

மேலும் படிக்க: 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. 24ஆம் தேதி வரை வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

குறிப்பாக, தனது குடும்பத்தைத் தகாத வார்த்தைகளால் விமர்சித்த தவெக தொண்டருக்கு பதிலளித்த ‘வீ த லீடர்ஸ்’ தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது கவலைக்குரியது.

விமர்சனங்களை வழக்கு கொண்டு அடக்குவதா?

சமூக வலைதளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம்தான். ஆனால், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல.

முதலமைச்சரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது. நீங்கள் இன்று ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சர்.

மேலும் படிக்க: இனி முதியவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை – சிறப்பு திட்டத்தை அறிவித்த அமைச்சர் அருண்ராஜ்

எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள். சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது.

எனவே, இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து, ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Follow Us