இனி முதியவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை – சிறப்பு திட்டத்தை அறிவித்த அமைச்சர் அருண்ராஜ்
Senior Citizens Health Scheme : 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெறும் வகையில் முதல்வரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இதில் வருமான உச்ச வரம்பு ஏதுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சென்னை, ஆகஸ்ட் 18 : 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெறும் வகையில் முதல்வரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இதில் வருமான உச்ச வரம்பு ஏதுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை
இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் சுகாதாரத்துறையில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் முதன்முறையாக 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கட்டணமில்லாமல் சிகிச்சை பெறும் வகையில் முதல்வரின் முதியோர் காப்பீட்டு திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டும் என்று அறிவித்தார். ந்த திட்டத்தின் மூலம் 38 லட்சம் மூத்த குடிமக்கள் வருமான உச்சரம்பின்றி கட்டணமில்லா செகிச்சை பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க : அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றது ஏன்… உயர்நீதிமன்றத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம்!




மேலும் இந்த திட்டத்தின் மூலம் புற்றுநோய் சிகிச்சைகள், இதய அறுவை சிகிச்சைகள், உறுப்பு மாற்று சிகிச்சைகள், உயர்தர பரிசோதனைகள் என அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் சிகிச்சை பெறும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்படும என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிட்ட அவர் எதிர்காலத்தில் சுகாதார அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப புதிய தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் இயற்றப்படும் என்றும் இந்த சட்டத்தில் வீடு மற்றும் மருத்துவமனை இல்லாத இடங்களில் சுய பிரசவம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என்ற பொதுப்பிரிவும் சேர்க்கப்படும் என்றார்.
உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள், மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவச் சுற்றுலா, ஆயுஷ் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் வழங்கும் வகையில் ‘தமிழ்நாடு மருத்துவ நகரம்’ உருவாக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய முதல்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இதையும் படிக்க : பாஜக தேசிய மகளிரணி தலைவர் பதவியிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு..!
மேலும், ரூ.2.56 கோடி செலவில் புதிய ஒருங்கிணைந்த தாய்ப்பால் மேலாண்மை அலகுகள், கடலூர், நாகை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர் மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு பல் சீரமைப்புசிகிச்சை ரூ.1.80 கோடி ஒதுக்கீடு, ரூ.1.80 கோடியில் விஷமுறிவு சிகிச்சைக்கான பிளாஸ்மா பரிமாற்ற இயந்திரங்கள், ரூ.8.68 கோடியில் உயிரி மருத்துவக் கழிவுகளை டிஜிட்டல் முறையில் கண்காணித்து பாதுகாப்பாக அகற்றும் அமைப்பு, ரூ.2.22 கோடி செலவில், ரேபிஸ் தடுப்புக்காக விலங்குகளைக் கையாளும் 2 லட்சம் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு முன் – தொற்று தடுப்பூசி (PrEP)திட்டம் தொடக்கம், ரூ.75 இலட்சம் செலவில், திருச்சி, கீழ்ப்பாக்கம், கோவை, சேலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையங்கள் போன்ற அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.