AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
கோவையில் கனமழை: தடுமாறி கீழே விழுந்த வாகன ஓட்டி பத்திரமாக மீட்பு

Sekaran S
Sekaran S | Updated On: 05 Oct 2026 20:11 PM IST

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மாலை பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், ஜி.என். மில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பெய்த கனமழையால் புதுப்பாளையம் தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறியது. இதனால் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது இருசக்கர வாகனத்தில் அந்தப் பகுதியை கடக்க முயன்ற ஒருவர் திடீரென வெள்ளத்தில் விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டனர்.

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அதன்படி கோவையில் மாலை பரவலாக மழை பெய்தது. கனமழையால் வெப்பம் தணிந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Published on: Oct 05, 2026 08:09 PM
Follow Us