AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெரம்பூரில் திடீர் விசிட்… மக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை உத்தரவு.. முதல்வர் விஜய் அதிரடி!

CM Vijay Inspected Perambur Constituency : பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் இன்று திடீர் ஆய்வும மேற்கொண்டார். அப்போது, தொகுதி மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

பெரம்பூரில் திடீர் விசிட்… மக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை உத்தரவு.. முதல்வர் விஜய் அதிரடி!
பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற முதல்வர் விஜய்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 07 Oct 2026 13:28 PM IST

சென்னை, மாதவரத்தில் செயல்பட்டு வரும் பால் பண்ணையில் முதல்வர் ஜோசப் விஜய் இன்று வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, பால் கொள்முதல் மற்றும் விநியோகம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தா. இதை தொடர்ந்து, தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு முதல்வர் விஜய் சென்றார். அங்கு, தவெக எம்எல்ஏ அலுவலகத்துக்கு சென்ற முதல்வர் விஜய், அங்கு திரண்டிருந்த தொகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட முதல்வர் விஜய் அதனை துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். தொடர்ந்து, இ சேவை மூலமாக பல்வேறு தேவைகள் குறித்து விண்ணப்பித்திருந்த பொது மக்களுக்கு பல்வேறு சான்றிதழ்களை முதல்வர் விஜய் வழங்கினார்.

பெரம்பூர் தொகுதி மேம்பாட்டு பணிகள் ஆய்வு

பின்னர், பெரம்பூர் தொகுதி மேம்பாட்டு பணிகள், தொகுதி மக்களின் குறைகள் கையாளப்படும் விதம், தொகுதி மக்களின் கோரிக்கைகளை தெரிவிக்கும் பிரத்தியேக செயலியின் செயல் திறன் ஆகிவற்றை முதல்வர் விஜய் ஆய்வு செய்தார். அங்கிருந்து புறப்பட்டு செல்கையில், தொகுதி மக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். அத்துடன் வட சென்னை பகுதிகளில் மழை நீர் ஏங்குவது மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன், ஆலோசனைகளையும் வழங்கினார்.

மேலும் படிக்க: பிரதமர் மோடியின் சென்னை விசிட்.. மெட்ரோ பயணம் முதல் இளையராஜா மையம் வரை.. முழு பிளான் இதோ!

2 ஆயிரம் மனுக்களில் 1300 மனுக்கள் மீது தீர்வு

இதில், பெரம்பூர் தொகுதி பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் 2 ஆயிரம் கோரிக்கை மனுக்களில் சுமார் 1,300 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், அந்தத் தொகுதியின் எம். எல். ஏ. என்ற முறையில் இன்று ஆய்வு மேற்கொண்டு இருந்தார். அத்துடன் தொகுதி மக்களையும் நேரில் சந்தித்து அவர்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களையும் பெற்றுள்ளார்.

மாதவரத்தில் புதிய பால் பண்ணை கட்டும் பணி

முன்னதாக மாதவரம் பால் பண்ணையில் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ. 2.23 கோடியில் கட்டப்பட்ட ஆவின் மாநில, மத்திய ஆய்வகத்தின் துணை கட்டிடத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்திருந்தார். அப்போது, பால்பண்ணையில் செயல்பாடுகளை பார்வையிட்ட அவர், அங்கு நடைபெறும் புதிய பால் பண்ணையில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். சென்னை மாநகர மக்களின் பால் தேவையே பூர்த்தி செய்யும் வகையில் மாதவரத்தில் ரூ.152.26 கோடியில் புதிய பால் பண்ணை கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ரூ.4,730 கோடி மணல் குவாரி முறைகேடு.. தோண்டி துருவிய ED.. சீனில் இறங்கிய DVAC.. பீதியில் திமுக புள்ளிகள்!

Follow Us