திருத்தணியில் கொடூரம்.. தியேட்டர் ஊழியரை திட்டமிட்டு தீர்த்துக் கட்டிய சிறுவர்கள்.. கொலைக்கான காரணம் குறித்து பகீர் வாக்குமூலம்!
Tiruttani Theatre Employee Murder : திருத்தணியில் தியேட்டர் ஊழியர் கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சிறுவன் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், திட்டமிட்டு கொலை சம்பவத்தை நிகழ்த்தியது தெரியவந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் என்ற ராஜா ( 46 வயது). இவர், இதே பகுதியில் சன்னதி தெருவில் செயல்பட்டு வரும் தனியார் சினிமா தியேட்டரில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு துர்கா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் யுவராஜின் மகள் தாளவேடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழகி வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த பெரியார் நகர் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் அந்த சிறுவனையும், யுவராஜின் மகளையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த யுவராஜின் மனைவி துர்கா திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரன்ஸ் என்பவரை கைது செய்தனர்.
தியேட்டர் ஊழியரை திட்டமிட்டு தீர்த்துக் கட்டிய கும்பல்
இந்த நிலையில், லாரன்ஸ் கைது செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் ஆன சுசில், ஹரீஷ், புவனேஷ் ஆகியோர் சேர்ந்து யுவராஜை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி, கடந்த அக்டோபர் 4- ஆம் தேதி மாலை யுவராஜ் தனது வீட்டின் முன்பு தனது குடும்பத்தினருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் யுவராஜை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றது.
மேலும் படிக்க: “இது உங்க அப்பன் வீட்டு பஸ்சா” ஒகேப்பா செல்லக்குட்டி வீடியோ எடு.. சென்னை பேருந்தில் நள்ளிரவில் இளம்பெண் அட்ராசிட்டி!




எஸ்.பி. உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைப்பு
இந்த கொடூரம் சம்பவம் நிகழ்வதை எதிர்பாராத யுவராஜ் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த அவரது மனைவி மற்றும் மகள்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சகலத்தை மீட்டு உடல் கூராய்வு மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட எஸ்பி கலியன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிர படுத்தப்பட்டது.
சிறுவன் உள்பட 4 பேரை தூக்கிய தனிப்படை
இதில், கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் செல்போன் தகவல்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கி இருந்த சுசில் ( 24 வயது), அரக்கோணம், பள்ளூர் பகுதியே சேர்ந்த ஹரிஷ் ( 18 வயது), புவனேஷ் ( 21 வயது) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: ரூ.4,730 கோடி மணல் குவாரி முறைகேடு.. தோண்டி துருவிய ED.. சீனில் இறங்கிய DVAC.. பீதியில் திமுக புள்ளிகள்!