AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பழனி நில முறைகேடு.. ரகசிய கண்காணிப்பில் சிக்கிய இருவர்.. தட்டி தூக்கிய சிபிசிஐடி போலீசார்!

Palani Temple Land Fraud Case : பழனி பாலதண்டாயுதபானி முருகன் கோயில் நில முறைகேடு வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அது தொடர்பான முழு விவரத்தை பார்க்கலாம்.

பழனி நில முறைகேடு.. ரகசிய கண்காணிப்பில் சிக்கிய இருவர்.. தட்டி தூக்கிய சிபிசிஐடி போலீசார்!
பழனி நில முறைகேட்டில் விசாரணை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 07 Oct 2026 11:32 AM IST

திண்டுக்கல், பழனி பால தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான நில முறைகேடு வழக்கில் மேலும் இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமாக ரூ. 100 கோடி மதிப்பிலான நிலம் இருந்து வருகிறது. இந்த நிலம் 2 பேருக்கு மோசடியாக பத்திர பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து 100 க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதோடு, பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றினர். இதில், தற்போது சார்பதிவாளர் அலுவலக இளநிலை உதவியாளர் சிவசங்கரி மற்றும் ஏற்கெனவே, கைதான இடைத்தரகர் ஜெயபிரகாசுக்கு உடந்தையாக செயல்பட்டதாக வழக்கறிஞர் சிவகுமார் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நில மோசடி வழக்கில் 6 பேர் கைது

ஏற்கனவே இந்த வழக்கில், நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்த விழுப்புரத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரும், அறங்காவலர் குழு உறுப்பினருமான முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூரை சேர்ந்த வெள்ளதுரை, பழனி, சேதுபதி ஆகியோரையும், நிலத்தை பத்திரப்பதிவு செய்த திண்டுக்கல் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், வழக்கறிஞர் அன்வர் தீன், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க: “இது உங்க அப்பன் வீட்டு பஸ்சா” ஒகேப்பா செல்லக்குட்டி வீடியோ எடு.. சென்னை பேருந்தில் நள்ளிரவில் இளம்பெண் அட்ராசிட்டி!

பத்திர எழுத்தரிடம் 2 நாள்கள் சிபிசிஐடி விசாரணை

இதில், வழக்கறிஞர் அன்வர் தீன் உடல் நலக்குறைவால் மதுரை மத்திய சிறையில் உயிரிழந்தார். இதில், பத்திர எழுத்தர் ஜெயபிரகாசை சிபிசிஐடி போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், போதிய தகவல் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. அதன் காரணமாக அவரது வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டதில் கணினி, ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில், சில தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது.

செல்போன்- வாட்ஸ் ஆப் உரையாடல்கள் பறிமுதல்

அத்துடன், ஏற்கனவே கைதானவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நடமாட்டத்தை சிபிசிஐடி போலீசார் கண்காணித்து வந்தனர். இதில், செல்போன், வாட்ஸ் ஆப் உரையாடல்கள், சமூக வலைதள பதிவுகள், வங்கி மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் ஆகியவற்றை போலீசார் கண்காணித்தனர். இதிலும் சில தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தான், பழனி நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையின் அடிப்படையில் மேலும் அதிர்ச்சி தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க: 10 ஆண்டு திருமண வாழ்க்கை கசந்தது.. கணவனை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் பெண் எஸ்கேப்.. வடபழனியில் அதிர்ச்சி சம்பவம்!

Follow Us