AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. 24ஆம் தேதி வரை வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

Chennai Rain Update : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதேசமயம், இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. 24ஆம் தேதி வரை வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 18 Aug 2026 15:32 PM IST

ஆகஸ்ட் 18, 2026: தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றோட்ட தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 18ஆம் தேதியான இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

ஆகஸ்ட் 19ஆம் தேதி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நாட்டில் 14 முதல்வர்கள் மீது தீவிர குற்ற வழக்குகள் – பட்டியலில் இடம்பெற்ற முதல்வர் விஜய் – பரபரப்பு தகவல்

ஆகஸ்ட் 20ஆம் தேதியைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இந்த நிலை ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள் தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை:

அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. எனினும், உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: முதல்வர் விஜய்யை சிரிக்க வைத்த திமுக எம்எல்ஏ எ.வ. வேலு.. கலகலப்பானது பேரவை.. என்ன நடந்தது!

சென்னையில் மழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதேசமயம், இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us