AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் விஜய்யை சிரிக்க வைத்த திமுக எம்எல்ஏ எ.வ. வேலு.. கலகலப்பானது பேரவை.. என்ன நடந்தது!

CM Joseph Vijay Laughed : தமிழக சட்டப்பேரவையில் திமுக எம். எல். ஏ. எ.வ.வேலு பேசிய வார்த்தைகளை கேட்டு முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வெட்கப்பட்டு சிரித்தார். அவர் என்ன கூறினார் எதற்காக முதல்வர் சிரித்தார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

முதல்வர் விஜய்யை சிரிக்க வைத்த திமுக எம்எல்ஏ எ.வ. வேலு.. கலகலப்பானது பேரவை.. என்ன நடந்தது!
முதல்வர் விஜய்யை சிரிக்க வைத்த திமுக எம்எல்ஏ
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 18 Aug 2026 13:46 PM IST

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணிக்கு தொடங்கிய கூட்டத்தொடரில் முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவும் ஆன எ. வ. வேலு பேசினார். அப்போது, முதல் அமைச்சர் ஜோசப் விஜய் அளித்த பதில் உரையில், டெண்டரை முறைப்படுத்த தெரிந்த அளவுக்கு, டெண்டரின் மதிப்பை உயர்த்தி ஊழல் செய்யத் தெரியாது என்று தெரிவித்திருந்தார். அப்போது, ஊழல் என்ற வார்த்தையை அவை குறிப்பில் இருந்து எடுத்து விடலாம். முதல் அமைச்சரை யாரோ தவறாக வழி நடத்தி விட்டார்களோ, அவருக்கு செய்தி தவறாக வந்து சேர்ந்திருக்கிறதோ அல்லது அதிகாரிகள் தவறாக எழுதிக் கொடுத்து விட்டார்களோ என்று தோன்றுகிறது என்றார் எ. வ. வேலு.

எ.வ.வேலுவின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்

இதைத் தொடர்ந்து, பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரும், அவை முன்னவருமான கே. ஏ. செங்கோட்டையன் முதல் அமைச்சரை யாரோ தவறாக வழிநடத்தி விட்டார்களோ, தவறாக எழுதி கொடுத்து விட்டார்களோ என்ற வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு அமைச்சர் கே. எ. செங்கோட்டையன் பேரவை தலைவரிடம் வலியுறுத்தினார். இதற்கு, சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் அவை குறிப்பில் இருந்து அந்த வார்த்தையை நீக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் படிக்க: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றது ஏன்… உயர்நீதிமன்றத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம்!

எ.வ.வேலுவின் பேச்சுக்கு முதல்வர் விஜய் சிரிப்பு

இதைத் தொடர்ந்து, பேசுகையில் முதல் அமைச்சரை யாரும் வழிநடத்த தேவையில்லை. அவர் எல்லாம் தெரிந்தவர் என்று குறிப்பிட்டார். இதே போல, எ. வ. வேலு பேசிய சலாம் போட்டார்கள் என்ற வார்த்தையை பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் நீக்கியதாக கூறினார். இதைத் தொடர்ந்து, பேசிய எ. வ. வேலு நீங்கள் எதை எடுத்தாலும் நியாயமாக தான் செய்கிறீர்கள். எனவே, அந்த வார்த்தையை அவை குறிப்பில் இருந்து எடுத்து விடுங்கள் என்று கூறிய போது, முதல் அமைச்சர் ஜோசப் விஜய் சிரித்தார்.

அவையில் நிலவிய கலகலப்பான சூழல்

அப்போது, பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் சிரித்தனர். இதனால், அவையில் சிறிது நேரம் கலகலப்பான சூழல் நிலவியது. முன்னதாக, எ. வ. வேலு, நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது அதிகாரிகள் எங்களுக்கு சலாம் போட்டார்கள். தற்போது, நீங்கள் ஆட்சியில் இருப்பதால் உங்களுக்கு சலாம் போடுகிறார்கள் என்று தெரிவித்திருந்தார். இந்த வார்த்தையை பேரவை தலைவர் நீக்குவதாக தெரிவித்ததற்கு அமைச்சர் கூறிய வார்த்தைக்கு தான் முதல்வர் விஜய் சிரித்தார்.

மேலும் படிக்க: தவெக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்கு.. ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பு.. என்ன காரணம்!

Follow Us