AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை நிலவரம் என்ன?

Rainfall Alert: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (அக்டோபர் 7) மற்றும் நாளை (அக்டோபர் 8) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை நிலவரம் என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Oct 2026 14:35 PM IST

அக்டோபர் 7, 2026: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள் கர்நாடகா வரை, உள் தமிழகம் மற்றும் தெற்கு உள் கர்நாடகா வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை:

அக்டோபர் 7: கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் கடலோர பகுதிகள், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

கோவை நீலகிரியில் தொடரும் கனமழை:

அக்டோபர் 8: கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழக பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 9: கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். மழையின்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும் படிக்க: பெரம்பூரில் திடீர் விசிட்… மக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை உத்தரவு.. முதல்வர் விஜய் அதிரடி!

அக்டோபர் 10: கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 11: நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 12 மற்றும் 13: நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: மருத்துவர் வேடத்தில் கைவரிசை.. ஸ்டான்லி மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்.. விசாரணையில் வெளிவந்த ஷாக் தகவல்!

3 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பநிலை:

அக்டோபர் 7 முதல் 11ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. அக்டோபர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் வட தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். தென் தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.

அக்டோபர் 9 முதல் 11ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (அக்டோபர் 7) மற்றும் நாளை (அக்டோபர் 8) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us