“கர்நாடக விவகாரத்தில் தமிழகம் தலையிடக்கூடாது” உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்… முதல்வர் டி.கே.சிவகுமார்!
3 Tamils Shooting Death : கர்நாடக மாநிலத்தில் 3 தமிழர்க ள் வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தமிழகம் தலையிடக்கூடாது. உங்கள் வேலையை நீங்கள் பார்க்க வேண்டும். எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம் என்று அம் மாநில முதல் அமைச்சர் டி. கே. சிவகுமார் தெரிவித்துள்ளார் .
கர்நாடக மாநிலத்தில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டு அந்த மாநிலத்தில் வசித்து வரும் 4 பேர் வனப்பகுதிக்குள் மான்களை வேட்டையாட சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது, கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் பீட்டர், அந்தோணிசாமி, குமார் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில், ஒருவர் குண்டு காயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அத்துடன் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக, கர்நாடக மாநிலத்தில் முதல்வர் டி. கே. சிவக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கர்நாட விவகாரத்தில் தமிழகம் தலையிடக்கூடாது
இதற்கு கர்நாடக மாநில விவகாரத்தில் தமிழகம் தலையிடக்கூடாது. உங்கள் வேலையை நீங்கள் பார்க்க வேண்டும். எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம். ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலங்கள் தலையிடக்கூடாது. ஓ. பன்னீர்செல்வம் அல்லது வேறு யாராக இருந்தாலும் இந்த அடிப்படை புரிதலை கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு விவகாரங்களில் என்னால் தலையிட முடியாது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதற்கு உரிய பிரச்சினைகள் உள்ளன. எங்கள் மாநிலத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்கு தெரியும் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: இளைஞர் கன்னத்தில் அறைந்தது குறைந்தபட்ச பல பிரயோகம்.. எஸ்.ஐ.- இளைஞர் மோதல் சம்பவம் குறித்து காவல் துறை விளக்கம்!




கர்நாட மாநில கண்ணியத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்
தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தங்கள் பணியை செய்யட்டும். நாங்கள் எங்கள் பணியை செய்கிறோம். அவர்களின் நிர்வாகத்தில் தலையிட நான் விரும்பவில்லை. எங்கள் மாநிலத்தின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார். கர்நாடக மாநில வனப்பகுதியில் மான்களை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கிகளுடன் 4 தமிழர்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கர்நாடகா வனத்துறையினர் திடீர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கர்நாடக துப்பாக்கிச் சூடு பின்னணி
இதில், தமிழர்களும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். ஆனால், வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் 3 தமிழர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதி
மேலும், உயிரிழந்த மூன்று தமிழர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வரிடம் ஆலோசனை மேற்கொண்டு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க இருப்பதாகவும் தமிழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேரவையில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான், கர்நாடக முதல்வர் டி. கே. சிவக்குமார் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டு கொன்ற சம்பவம்.. குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம்.. வனத்துறை அமைச்சர்!