நான் படம் மூலமாக அரசியல் பேசுகிறேன் – இயக்குனர் அட்லி தகவல்
விஜய் சேதுபதி நடித்த சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட பத்தா திரைப்படத்தின் தயாரிப்பாளர் அட்லீ, பத்தா படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன், இசை அமைப்பாளர் சாய் அபயங்கர், நடிகை லிஜோமோல் ஜோஸ், சிறுவன் கதாபாத்திரம் சாய் பிரித்விராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
விஜய் சேதுபதி நடித்த பத்தா திரைப்படத்தின் தயாரிப்பாளர் அட்லீ, இயக்குனர் பாலாஜி தரணிதரன், இசை அமைப்பாளர் சாய் அபயங்கர், நடிகை லிஜோமோல் ஜோஸ், சிறுவன் கதாபாத்திரம் சாய் பிரித்விராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இயக்குனர் தயாரிப்பாளர் அட்லீ பேசுகையில், நான் ரொம்ப சிம்பிள் கதை பிடித்து இயக்குனரோட மனநிலையும் என்னுடைய மனநிலையும் சேர்ந்தால் நான் அந்த இயக்குனரை தேர்ந்தெடுக்கிறேன் ஒரு தயாரிப்பாளரா ஒரு படத்திற்கு எவ்வளவு தூரம் நிற்க வேண்டும் என்பதை நான் பீல் செய்து இருக்கிறேன். நான் தயாரிக்கிற படங்களில் நான் என்ன செய்ய வேண்டுமோ கத்துக் கொண்டு செய்கிறேன். நான் ராஜா ராணி லோ பட்ஜெட்டில் தான் செய்தேன். ஹை பட்ஜெட் லோ பட்ஜெட் என்பது வியாபாரத்திற்கு தான். சிறிய படம் கதை அமைந்தால் செய்வேன். ராஜா ராணி மாதிரி சிறிய படம் மற்றும் டியூட் போன்ற சிறிய படம் எடுக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது.
தமிழில் தான் எழுதப் பிடிக்கும். தமிழை மட்டும் தான் எழுத தெரியும். பான் இந்தியா என்பதை ஒரு வார்த்தையில் அடக்க வேண்டாம். அந்த காலத்தில் இருந்தே இது இருக்கு. வெளியில் பூ வைத்து அதை வேற மாதிரி காட்டுவதற்கு ஒன்னும் இல்லை. நடிகர் அஜித்குமார் வைத்து படம் பண்ணலாம். நான் ஒரு படம் எடுத்து முடிக்கும் வரை வேறு படத்தை கான்சன்ட்ரேஷன் செய்ய மாட்டேன். ஒரு படத்தை முழுதாக எடுத்து மக்களிடம் சென்ற பின்பு தான் இரண்டு மாதம் வெளியே சென்று விடுவேன். ராக்கா முடிந்த பின்பு அடுத்த படத்தைப் பற்றி யோசிப்பேன் என்றார். அப்போது அவரிடம் விஜய் அண்ணாவுடன் அரசியல் செல்வீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த, நாங்கள் சிறந்த நண்பர்கள். படம் மூலமாக நான் அரசியலை சொல்கிறேன் அதில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். என்னை நம்பி நிறைய பேர் இருக்கிறார்கள் அரசியல் போன்ற எண்ணம் எனக்கு இல்லை என்றார்.
நான் படம் மூலமாக அரசியல் பேசுகிறேன் - இயக்குனர் அட்லி தகவல்
சென்னையில் அராஜகம்.. நள்ளிரவில் இளைஞர்கள் செய்த அட்டகாசம்!
லுங்கிக்குள் மறைத்து ஹெல்மெட் திருட்டு.. வெளியான சிசிடிவி காட்சி.
தொடர் விடுமுறை.. ஏற்காட்டில் குவியும் சுற்றுலா பயணிகள்..!
