AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
சென்னையில் நள்ளிரவு பைக் ரேஸ் சாகசம்.. 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அட்டகாசம்.. போலீசார் எங்கே? பொதுமக்கள் கேள்வி!!

சென்னையில் நள்ளிரவு பைக் ரேஸ் சாகசம்.. 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அட்டகாசம்.. போலீசார் எங்கே? பொதுமக்கள் கேள்வி!!

Samy
Samy | Published: 04 Oct 2026 12:09 PM IST

Chennai Midnight Bike Stunt Controversy: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நள்ளிரவில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆபத்தான முறையில் பைக் சாகசங்களில் ஈடுபட்டுப் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறை ஏற்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 3 பேரைப் பிடித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இரவு நேரப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையின் மெத்தனப்போக்கு குறித்து பொதுமக்கள் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

சென்னை, அக்.04: தலைநகர் சென்னையில் நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் முக்கியச் சாலைகளை ஆக்கிரமித்து இளைஞர்கள் ஆபத்தான முறையில் பைக் பந்தயங்களிலும், சாகசங்களிலும் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால்ச் சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் அச்சமடைவதோடு, எதிர்பாராத விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனைத் தடுக்கக் காவல்துறையினர் பல்வேறு ரோந்து நடவடிக்கைகளையும், வாகனத் தணிக்கைகளையும் மேற்கொண்டு வந்தாலும், போலிசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நள்ளிரவில் இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடும் கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், சென்னையின் மையப்பகுதியாகவும், முக்கியப் போக்குவரத்து மண்டலமாகவும் விளங்கும் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சந்திப்பு பகுதியில் நேற்று நள்ளிரவில் கடுமையான பொது அமைதிப் பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று திரண்டு, தங்களது இருசக்கர வாகனங்களில் அதிவேகமாகவும், ஒரே நேரத்தில் பலவித ஆபத்தான சாகசங்களிலும் ஈடுபட்டனர். வாகனங்களின் அதிகப்படியான ஒலி பெருக்கிகள் மற்றும் சாகசங்களின் போது எழுந்த இரைச்சல் காரணமாக அப்பகுதி மக்கள் தூக்கம் கலைந்து கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், அந்த நேரத்தில் சாலையில் பயணித்த மற்ற வாகன ஓட்டிகளையும் அச்சமடையச் செய்யும் வகையில் இந்த இளைஞர்களின் போக்கிரித்தனம் அமைந்திருந்தது.

Follow Us