பெரும் மனநிறைவை கொடுத்த படம்… டோரதி படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் மாரி செல்வராஜ்!
Director Mari Selvaraj praised Dorothy movie | தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் டோரதி படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் பார்த்துவிட்டு தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெகுவாகப் பாராட்டி உள்ளார்.
இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த அனைவருக்கும் தங்களின் அடையாளத்தை முடிவு செய்துகொள்வதில் உரிமை உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் ஆணாக பிறந்து இருந்தாலும் அவர்களுக்கு பெண்களின் குணநலன்கள் மற்றும் பெண்ணாக வாழ நினைக்கும் ஆண்கள் பெண்களை போலவே மாற முயற்சி செய்து அவர்களை போலவே தோற்றத்தையும் ஏற்படுத்திக்கொள்வார்கள். ஆனால் இப்படி நினைத்த உடனேயே ஒரு ஆணால் அதனை இந்த சமூகத்தில் செய்ய முடியாது. அதுவும் இந்தியா மாதிரியான ஒரு நாட்டில் ஆண் என்றால் கர்வமாக பார்க்கக்கூடிய ஒரு நாட்டில் ஆணாக பிறந்தவன் பெண்ணாக மாற நினைப்பதை கடுமையாக இந்த சமூகம் எதிர்க்கிறது. அப்படி ஒரு ஆண் நினைக்கும் போது அதே வீட்டில் இருக்கும் பெண்களே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உள்ளனர். இதனை பல திருநங்கைகளின் பேட்டிகளில் காண முடியும்.
இப்படி இருக்கும் சூழலில் ஆணாக பிறந்த ஒருவன் பெண்மையை உணர்ந்து பெண்ணாக வாழ நினைக்கும் போது என்ன எல்லாம் நடக்கிறது, எத்தனை இழப்புகள் ஏற்படுகின்றது என்பதையும் ஒரு திருநங்கையின் வாழ்க்கை பயணம் எவ்வளவு கடுமையானதாக இருக்கும் என்பதையும் சமீபத்தில் வெளியான டோரதி படம் வெளிப்படுத்தி உள்ளது. இந்தப் படத்தை ரசிகர்களும் பிரலங்களும் தொடர்ந்து பார்த்து பாராட்டி வருகின்றனர்.




டோரதி படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் மாரி செல்வராஜ்:
இந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் டோரதி படத்தைப் பார்த்துவிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, இன்று டோரதி பார்த்தேன். ரொம்ப தாமதம் தான். ஆனாலும் பெரும் மனநிறைவை கொடுத்த படம். எப்படியாப்பட்ட மனிதர்களின் கதைகள் படமாக்கப்படவேண்டும் என்று பெரும் விருப்பத்தோடு இருக்கிறோமோ அப்படியாப்பட்ட மனிதர்களின் கதையும் அழுகையும் ஆசைகளும் விருப்பங்களும் துரோகங்களும் கனவுகளும் நம்பிக்கைகளும் அப்பட்டமாய் படம் பிடிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்கு காரணமான இயக்குநர் திரு.கார்த்திக் சுப்புராஜிற்கும் அதை பெரும் தூணாக நின்று சாத்தியபடுத்திக் கொடுத்த நம் ராஜாவின் இசைக்கும், மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகளும் அன்பும் என்று தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பிரபல இயக்குநரின் படத்திற்கு நோ சொன்ன ஐஸ்வர்யா லட்சுமி – வைரலாகும் தகவல்
இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
இன்று டோரதி பார்த்தேன். ரொம்ப தாமதம் தான். ஆனாலும் பெரும் மனநிறைவை கொடுத்த படம். எப்படியாப்பட்ட மனிதர்களின் கதைகள் படமாக்கப்படவேண்டும் என்று பெரும் விருப்பத்தோடு இருக்கிறோமோ அப்படியாப்பட்ட மனிதர்களின் கதையும் அழுகையும் ஆசைகளும் விருப்பங்களும் துரோகங்களும் கனவுகளும் நம்பிக்கைகளும் அப்பட்டமாய் படம் பிடிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்கு காரணமான இயக்குநர் திரு.கார்த்திக் சுப்புராஜிற்கும் அதை பெரும் தூணாக நின்று சாத்தியபடுத்திக் கொடுத்த நம் ராஜாவின் இசைக்கும், மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகளும் அன்பும்… @ilaiyaraaja @karthiksubbaraj
— Mari Selvaraj (@mari_selvaraj) October 7, 2026
Also Read… பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட கலேபர டாஸ்க் – வைரலாகும் வீடியோ