நாமினேஷனில் போட்டியாளர்களால் குத்தப்படும் லக்ஷ்மி பிரியா – ஷமா… இனி விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 5-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறுகின்றது. அது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழில் அதிக அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி 9 சீசன்கள் முடிவடைந்து தற்போது 10-வது சீசனில் எட்டி தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து தமிழக மக்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும் போட்டியாளர்கள் தொடர்ந்து மக்களிடையே தங்களின் குணநலன்கள் அடிப்படையில் பிடித்தமானவர்களாக இருப்பார்கள். அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சியில் யாருடைய ஆட்டத்தைப் பார்க்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு வாக்குகளை செலுத்தி தொடர்ந்து வீட்டிற்குள்ளே வைத்து அவர்களின் ஆட்டைத்தை பார்க்க நினைப்பார்கள். யார் விளையாட வேண்டும் போட்டியில் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதற்காக இந்த ப்ராசஸ் தொடர்ந்து நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது எவிக்ஷன் ஃப்ரீ பாஸை ஷமா பெற்றுள்ளார். தொடர்ந்து 4 வாரங்களாக அவரது போட்டியின் அடிப்படையில் இந்த பாஸ் வழங்கப்பட்டது. இந்த பாஸை அவர் 10-வது வாரம் வரை பயண்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




நாமினேஷனில் போட்டியாளர்களால் குத்தப்படும் லக்ஷ்மி பிரியா – ஷமா:
இந்த நிலையில் இன்று 5-வது வாரத்திற்கான எவிக்ஷன் ப்ராசஸ் நடைபெறுவதை நிகழ்ச்சி குழு புரோமோ வீடியோவில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் வரிசையாக தாங்கள் நாமினேட் செய்ய விருப்பும் நபர்களின் பெயர்களை குறிப்பிடுகிறார்கள். அதில் அதிக அளவில் ஷமா மற்றும் லக்ஷ்மி பிரியாவின் பெயர்கள் குறிப்பிடுவது தெரிகிறது. மேலும் ஷமா இந்த எவிக்ஷன் ஃப்ரீ பாஸை பயன்படுத்தும்வரை தொடர்ந்து அவர் நாமினேட் செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… சூர்யா அண்ணே ரொம்ப சந்தோசமா இருக்கு… நடிகர் சூரி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day29 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9.30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #BiggBossTheTurningPoint #BBTurningPoint #TheTurningPoint #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #VijayTV #VijayTelevision
— Vijay Television (@vijaytelevision) October 5, 2026
Also Read… Lokesh Kanagaraj: கைதி 2 படத்திற்கு அதிக சம்பளம் கேட்டேனா? – உண்மையை சொன்ன லோகேஷ் கனகராஜ்!