AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முடிஞ்சா எலிமினேட் பண்ணிக்காட்டுங்க… ஜேசனிடம் சவால் விட்ட கரிஷ்மா – பரபரப்பான புரோமோ!

BB Tamil 10: தமிழில் மக்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருப்பது பிக் பேச. இந்த நிகழ்ச்சியின் சீசன் 10 தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்நிலையில் 28வது நாளான இன்று (04/10/2026) மூன்று வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் நுழைந்துள்ளார். அதில் வந்த கரிஷ்மா, முதல் நாளிலே ஜேசனிடம் சவால் விட்டுள்ளார்.

முடிஞ்சா எலிமினேட் பண்ணிக்காட்டுங்க… ஜேசனிடம் சவால் விட்ட கரிஷ்மா – பரபரப்பான புரோமோ!
ஜேசன் மற்றும் கரிஷ்மா சவால்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Oct 2026 19:42 PM IST

பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் தொடக்கம் முதல் ஆரம்பமானது. ஆண்டாண்டாக தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இது இருந்துவருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சியானது தமிழில் ஆரம்பமான நிலையில், கிட்டத்தட்ட 10 வருடங்களை நெருங்கியுள்ளது. கிட்டத்தட்ட 7 சீசன்களை கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுக்க, 8வது சீசன் முதல் விஜய் சேதுபதி தொகுத்துவருகிறார். இந்நிலையில் இன்று (04/10/2026) இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 28 நாட்களாகியுள்ளது. அந்த விதத்தில் மூன்று வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் நுழைந்துள்ளார். அதில் டிடிஎப் வாசன் (TTF Vasan), அக்ஷிதா அசோக் மற்றும் கரிஷ்மா போன்ற போட்டியாளர்கள் நுழைந்துள்ளார்.

இதில் 2வது போட்டியாளராக நுழைந்த கரிஷ்மா , நுழைந்த முதலிலே ஜேசனை டார்கெட் செய்து பேசியுள்ளார். மேலும் ஒவ்வொரு பெண் போட்டியாளர்களையும் அவர் டார்கெட் செய்யும் விஷயம் பற்றியும் குறிப்பிட்டு மற்றும் சவாலோடு பேசியிருந்தார்.

இதையும் படிங்க: நோ ஸ்கிரிப்ட்.. நோ பேப்பர்.. அரசன் படத்தின் ஷூட்டிங் எக்ஸ்பீரியன்சை பகிர்ந்த யோகலட்சுமி!

ஜேசனிடம் சவால்விட்டு வைல்ட் கார்ட் என்ட்ரி கரிஷ்மா :

வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்திருக்கும் கரிஷ்மா, பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர். இவர் அந்த நிகழ்ச்சியில் மக்களின் மனதை கவர்ந்த நிலையில், பின் வெளியேறிவிட்டார். இதற்கு பின் தற்போது வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நுழைந்துள்ளார்.

இதையும் படிங்க:  அனைத்திலும் சிறந்த படைப்பாக அமைந்துள்ளது டோரதி – பாராட்டி தள்ளிய இயக்குநர் அஜய் ஞானமுத்து

நுழைந்த முதல் நாளையே சக போட்டியாளரான ஜேசனிடம் சவால் விட்டுள்ளார். ஒவ்வொரு பெண் போட்டியாளர்களை டார்கெட் செய்யது ஜேசன் வெளியேற்றுவதாகவும், இனிமே நான் இருக்கும் வரையில் அது நடக்காது என அவரிடம் சவால் விட்டு பேசியுள்ளார். இது தொடர்பான புரோமோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஜேசனிடம் சவால்விட்டு கரிஷ்மா பேசியது தொடர்பான பிக் பாஸ் புரோமோ பதிவு:

இந்த வாரத்தில் மொத்தம் 3 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், தற்போது 3 வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் நுழைந்துள்ளார். ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது பரபரப்பான சூழலில் இருந்துவரும் நிலையில், மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரியின் நுழைவாள் மேலும் சுவாரஸ்யமாகும் என கூறப்படுகிறது.

Follow Us