பிக்பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட ஜாவித் – சவின்யா… வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கடந்த மூன்றாவது வார இறுதியில் மூன்று பேர் வைல்கார்ட் போட்டியாளர்களாக உள்ளே சென்ற நிலையில் இந்த வார இறுதியில் மூன்று பேர் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பல புதுப் புது நிகழ்வுகள் நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த சீசனில் வீட்டில் உள்ள போட்டியாளர்களே ஒரு நபரை தேர்வு செய்து வாரம் வாரம் ஒருவரை வெளியேற்றுவதுதான். அப்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் அந்த வாரம் லீடராக இருக்கும் நபர் வீட்டில் உள்ள 3 பேரை தேர்வு செய்வார். அவர்களில் இருந்து ஒருவரை மற்ற போட்டியாளர்களின் வோட்டிங் முறையில் தேர்வு செய்து வெளியேற்றி வந்தனர். தொடர்ந்து மூன்று வாரங்களாக லீடர் எக்ஸிட் முறையில் வெளியேறிய சாவின்யா, ஜாவித் மற்றும் லக்ஷ்மி பிரியா ஆகியோர் மூன்றாவது வார இறுதியில் மீண்டும் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அவர்கள் வீட்டில் உள்ள மூன்று பேரை தேர்வு செய்து ரோப் டாஸ்க் விளையாடினர்.
அதன்படி 4-வது வாரம் தொடங்கும் போது பிக்பாஸ் இந்த 6 நபர்களில் இருந்து 3 பேர் நிச்சயமாக வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிவித்தார். வாரம் முழுவதும் போட்டியாளர்களிடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் குமரன் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில் அவருடன் கைகட்டப்பட்டு இருந்த லக்ஷ்மி பிரியா சேவ் ஆனார்.




பிக்பாஸிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட ஜாவித் – சவின்யா:
இந்த நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரோமோ வீடியோவில் ஜாவித் மற்றும் சாவின்யா இருவரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது தெரிவித்துள்ளனர். அதன்படி வீட்டில் இருந்த போதே எதிர்பாராத நேரத்தில் ஜாவித்தின் கைகளில் இருந்த கயிறு கழண்டது. இதனால் அவர் வெளியேற்றப்பட்டார். மேலும் அஸ்மிதா – சாவின்யா இருவரும் கடுமையாக விளையாடிய நிலையில் ஓட்டிங்கிள் குறைவாக உள்ள சாவின்யா வீட்டைவிட்டு வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… Alia Bhatt: புத்துணர்ச்சியான சருமம்.. முக பொலிவுக்காக ஆலியா பட் சொன்ன ஸ்நாக் ரெசிபி!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day28 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 8 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #BiggBossTheTurningPoint #BBTurningPoint #TheTurningPoint #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #VijayTV… pic.twitter.com/9EuooPtZEz
— Vijay Television (@vijaytelevision) October 4, 2026
Also Read… கீர்த்தி சுரேஷின் சத்யவான் சாவித்திரி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!