அனைத்திலும் சிறந்த படைப்பாக அமைந்துள்ளது டோரதி – பாராட்டி தள்ளிய இயக்குநர் அஜய் ஞானமுத்து
Director Ajay Gnanamuthu praised Dorothy movie | இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் டோரதி. இந்தப் படத்தினைப் பார்த்துவிட்டு இயக்குநர் அஜய் ஞானமுத்து வெகுவாகப் பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக உள்ள நடிகர்கள் விஜய் சேதுபதி, தனுஷ், ரஜினிகாந்த் மற்றும் சூர்யா என பலரை வைத்து படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் டோரதி. இந்தப் படம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான 10-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கிய இந்த டோரதி படம் கடந்த 11-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து படத்தைப் பார்த்துவிட்டு வெகுவாகப் பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




அனைத்திலும் சிறந்த படைப்பாக அமைந்துள்ளது டோரதி:
அதன்படி இயக்குநர் அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, எழுத்து, இயக்கம், நடிப்பு, இசை, தயாரிப்பு எனப் பல அம்சங்களிலும் டோரத்தி ஒரு மிகச்சிறந்த படைப்பாகத் திகழ்கிறது. கார்த்திக் சுப்பராஜ் சகோதரே, நீங்கள் ஒரு தலைமுறைக்கே ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய அரிய திறமைசாலி. நாம் அனைவரும் கொண்டாடவும் போற்றவும் வேண்டியவர் நீங்கள். உங்கள் கைவண்ணமும், நீங்கள் கையாண்ட கருப்பொருளும் என்னை மெய்சிலிர்க்கவும், வியப்பில் ஆழவும் வைத்துவிட்டன. உங்களுக்கு மிகுந்த மரியாதை! இப்படம் காலத்தால் அழியாத ஒரு காவியம் இதில் மாற்றுக்கருத்தே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Also Read… Rishikanth: என்னுடைய 13 வருடப் பயணம்.. சினிமாவில் கிடைத்த வெற்றி குறித்து ரிஷிகாந்த் உருக்கம்!
இயக்குநர் அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#Dorothy is a masterclass in writing, directing, acting, music, making etc etc etc!!👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 @karthiksubbaraj brother you are once in a generation talent we all have to celebrate and cherish❤️❤️ Blown over and spellbound by your craftsmanship and the subject you decided to explore!! Mad mad respect! 🫡🫡This film is a timeless CLASSIC!! Dot!!
— Ajay R Gnanamuthu (@AjayGnanamuthu) October 3, 2026
Also Read… Nivin Pauly: ஆவலுடன் எதிர்பார்த்த அப்டேட்.. பென்ஸ் பட 4வது ஷெட்டியூலில் இணைந்த நிவின் பாலி!