நானியின் தி பாரடைஸ் படத்திலிருந்து வெளியானது அஞ்சானா அஞ்சானி பாடல் வீடியோ
Anjaana Anjaani Video Song From The Paradise | நடிகர் நானியில் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் உருவாகி சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் தி பாரடைஸ். இந்தப் படத்தில் இருந்து தற்போது அஞ்சானா அஞ்சானி என்ற பாடல் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நானி. இவரது நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படம் தி பாரடைஸ். பீரியட் ஆக்ஷன் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா எழுதி இயக்கி உள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படமும் வெற்றியடையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். மேலும் இந்தப் படம் கடந்த 24-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மாறாக ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரசிகர்கள் நானியை கடிந்துகொள்ளாலம் உங்களை நம்பினோம், நீங்கள் எங்கள் அண்ணா என்று ட்ரோளையும் பாசமாக செய்தனர்.
இதனைப் பார்த்த நானி உங்களின் விமர்சனம் எனக்கு புரிகிறது. நான் திருத்திக்கொள்கிறேன் என்று அந்த ட்ரோல்களுக்கு பதிலையும் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் படம் தொடர்ந்து தற்போதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.




தி பாரடைஸ் படத்திலிருந்து வெளியானது அஞ்சானா அஞ்சானி பாடல் வீடியோ:
இந்தப் படத்தில் நடிகர் நானி நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை கயாடு லோஹர் நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் இருந்து அஞ்சானா அஞ்சானி என்ற பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Jailer 2: என்னப்பா ரெடியா..? ஐமேக்ஸ் தரத்தில் திரையரங்குகளில் வெளியாகும் ஜெயிலர் 2..!
தி பாரடைஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
We all loved Jadal & Subbu’s love on screen ❤️#AnjaanaAnjaani video song out now 🤩
▶️ https://t.co/DR5h07cBdg#TheParadise is running successfully in its grand 2nd week ❤🔥Book your tickets now!
🎟️ https://t.co/XTkG9ueWdvNatural Star @NameisNani in an @odela_srikanth… pic.twitter.com/bc4jBScvyv
— SLV Cinemas (@SLVCinemasOffl) October 3, 2026