நானியின் ப்ளடி ரோமியோ படத்தில் இணைந்த பிரித்விராஜ் சுகுமாரன்? வைரலாகும் தகவல்
Prithviraj Sukumaran New Movie Update | மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவர் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி அடுத்தடுத்து பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக இவர் நடிக்கும் படம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் வாரிசு நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கி இருந்தாலும் தொடர்ந்து தனது கடின உழைப்பின் காரணமாக தற்போது பான் இந்திய நட்சத்திரமாக வலம் வருகிறார் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவர் தொடர்ந்து படங்களில் நாயகனாக மட்டும் இன்றி அவ்வபோது படங்களை இயக்குவது மட்டும் இன்றி தயாரித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மலையாள சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்து வரும் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் அவ்வபோது மற்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் அடுத்தடுத்து 4 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதில் மூன்று மலையாள சினிமாவிலும் 1 இந்தி சினிமாவில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் அடுத்ததாக நடிகர் நானியின் படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




நானியின் ப்ளடி ரோமியோ படத்தில் இணைந்த பிரித்விராஜ் சுகுமாரன்?
அதன்படி சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, நானி நடிப்பில் தெலுங்கு சினிமாவில் தற்போது உருவாகி வரும் பிளடி ரோமியோ திரைப்படத்தில் மலையாள நட்சத்திரம் பிருத்விராஜ் சுகுமாரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இதில் அவர் வில்லனாக நடிக்கவில்லை. படம் முழுவதும் அவரது கதாபாத்திரம் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… தீபாவளி ரேஸில் இருந்து விலகுகிறதா மூக்குத்தி அம்மன் 2 படம்? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#BloodyRomeo – Interesting Casting Buzz 👀
Malayalam star #Prithviraj plays a full-fledged role in #Nani’s upcoming film #BloodyRomeo.
interestingly, Prithviraj is NOT the antagonist 😱.
His character is said to have a significant presence throughout the film.
Follow 👉… pic.twitter.com/LapqfW7bRw
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) September 19, 2026
Also Read… நடிகர் சூர்யாவின் சீன் படத்திலிருந்து வெளியானது புது போஸ்டர்!