நானியின் தி பாரடைஸ் படத்தை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம்
The Paradise Movie | நடிகர் நானியின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தி பாரடைஸ். இந்தப் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபரர் ஃபிலிம்ஸ் பெற்றுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி (Actor Nani). இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் உள்ள சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் நானி அவ்வபோது மற்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் நானி நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் வரிசையாக வெளியாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் நானியின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தி பாரடைஸ். மிகவும் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் நானி உடன் இணைந்து நடிகர் கயாடு லோஹர் மற்றும் பல நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். தொடர்ந்து இந்தப் படம் வருகின்ற 24-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




தி பாரடைஸ் பட கேரள ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்:
அந்த வகையில் நடிகர் நானியின் நடிப்பில் உருவாகி உள்ள இந்த தி பாரடைஸ் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை நடிகர் துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான் படங்களை தயாரிப்பது மற்றும் வெளியிடுவதிலும் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… இயக்குநர் அட்லி எனக்கு ஒரு சிறந்த வழிகாட்டி – இயக்குநர் சிபி சக்ரவர்த்தி
வேஃபரர் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A storm is brewing in God’s Own Country! 🌧️⚡ We are beyond excited to bring Natural Star Nani and Srikanth Odela’s massive action entertainer ‘The Paradise’ to Kerala theatres. Get ready for an absolute cinematic wildfire! 🔥#TheParadise GRAND RELEASE WORLDWIDE ON 24⋆09⋆26… pic.twitter.com/X9NbSjJURC
— Wayfarer Films (@DQsWayfarerFilm) September 19, 2026
Also Read… பிக்பாஸ் தமிழில் கடந்த வாரம் விஜய் சேதுபதி கூறிய சர்ச்சை கருத்து… இந்த வாரம் விளக்கம் அளித்துள்ளார்!