AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சீன் படத்தில் நஸ்லேனின் நடிப்பை பார்த்து வியந்த சூர்யாவின் அடுத்த ப்ளான் என்ன?

Suriya is planning to produce Naslen movie | நடிகர் சூர்யா தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பிரபல மலையாள நடிகர் நஸ்லேனின் படத்தை தயாரிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

சீன் படத்தில் நஸ்லேனின் நடிப்பை பார்த்து வியந்த சூர்யாவின் அடுத்த ப்ளான் என்ன?
நஸ்லேன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Sep 2026 16:43 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தொடர்ந்து சினிமாவில் படங்களில் நடிப்பது மட்டும் இன்றி படங்களை தயாரித்தும் வருகிறார். தொடர்ந்து சினிமாவில் பிசியாக வலம் வரும் இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியான நிலையில் அடுத்ததாக மூன்றாவதாக சீன் என்ற படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி நடிகர் சூர்யாவின் நடிப்பில் 47-வது படமாக உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான ஆவேஷம் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆவேஷம் படத்தைப் போல தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள சீன் படம் வரவேற்பைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் நஸ்ரியா மற்றும் நஸ்லேன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் நஸ்லேனின் நடிப்பைப் பார்த்து சூர்யா வியந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

சீன் படத்தில் நஸ்லேனின் நடிப்பை பார்த்து வியந்த சூர்யா:

சூர்யா சமீபத்தில் ‘சீன்’ (Scene) திரைப்படத்தில் நாஸ்லனின் நடிப்பைப் பார்த்து வியந்துபோனார். அவரது நடிப்பால் பெரிதும் ஈர்க்கப்பட்ட சூர்யா, ‘ழகரம் ஸ்டுடியோஸ்’ (Zhagaram Studios) சார்பில் அவருக்காக ஒரு தமிழ்த் திரைப்படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் நாஸ்லன் ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… சந்தீப் கிஷன் – ஜேசன் சஞ்சயின் சிக்மா பட ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச் அப்டேட் கொடுத்த படக்குழு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… The Paradise: கயாடு லோஹர் வில்லனா?.. தி பாரடைஸ் பட புது போஸ்டரை பகிர்ந்த படக்குழு!

Follow Us