Dare Devil: தல ரசிகர்களே ரெடியா..! டேர் டெவில் பட ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது தெரியுமா?
Dare Devil Movie Shooting: கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகராகவும், இந்திய அளவில் சிறந்த கார் ரேஸராகவும் இருந்துவருபவர் அஜித் குமார். இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டேர் டெவில் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது இப்படத்திலிருந்து முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). கோலிவுட் சினிமாவில் நாயகனாக படங்களில் நடித்துவந்த இவர், தற்போது கார் ரேஸிலும் (Car Race) ஆர்வத்தை காட்டிவருகிறார். இவர் கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலிருந்து முழுமையாக கார் ரேஸில் இணைந்த நிலையில், படங்களில் நடிக்கவில்லை. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் எந்த படங்களிலும் நடிக்காமல், முழுவதுமாக தனது கவனத்தை கார் ரேஸில் செலுத்தியிருந்தார். மேலும் அஜித் குமாரின் நடிப்பில் இறுதியாக குட் பேட் அக்லி (Good Bad Ugly) படமானது வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், அதன் வெற்றியை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மற்றும் ஷாலினி அஜித் குமாரின் (Shalini Ajith kumar) தயாரிப்பில் அஜித், டேர் டெவில் (Dare Devil) என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
இப்படம் ஆரம்பத்தில் AK64 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின் டேர் டெவில் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: என்னோட ரியாக்ஷனா? விஜய் முதல்வரானது குறித்து தனது மன நிலை பற்றி பேசிய ஜேசன் சஞ்சய்!
அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடக்கம்:
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித் கூட்டணியில் இந்த டேர் டெவில் படமானது தயாராகவுள்ளது. இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இதன் ஷூட்டிங் எப்[ஒத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 02ம் தேதியில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: எல்லம்மா படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் பிரபல நடிகை? அட இவரா?
அஜித் குமாரின் டேர் டெவில் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடக்கம் குறித்து சுரேஷ் சந்திரா வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Dare Devil filming begins from November 02nd 2026! 🎬🎲🎲#DareDevil – #AjithKumar #ShaliniAjithkumar @Braveheartsprod @Adhikravi @anirudhofficial @SureshChandraa @AbinandhanR @editorvijay @supremesundar #Subbhunaarayan @itsanuvardhan @kayoas13 @valentino_suren @Donechannel1… pic.twitter.com/be8l04wWHx
— Suresh Chandra (@SureshChandraa) September 16, 2026
இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் நிலையில், ஷாலினி அஜித் குமார் தயாரிக்கிறார். கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பின் தயாரிப்பாளாராக ஷாலினி சினிமாவில் நுழைந்துள்ளார். இந்த படத்தில் அஜித் குமார் நாயகனாக நடிக்கும் நிலையில், அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் அஜித் குமாருடன் எந்த நடிகை நடிக்கிறார் என்பது குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.