AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நண்பேண்டா மொமண்ட்… அஜித் உடன் ரேஸ் காரில் பயணித்த முதலமைச்சர் விஜய் – வைரலாகும் வீடியோ

Vijay With Ajith Kumar | முதலமைச்சர் விஜய் சமீபத்தில் நடிகர் அஜித் குமார் போட்டியிட்ட கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு சென்றார். அங்கு அஜித் குமார் உடன் அவரது அனுபவம் குறித்து முதலமைச்சர் விஜய் வீடியோ வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பேண்டா மொமண்ட்… அஜித் உடன் ரேஸ் காரில் பயணித்த முதலமைச்சர் விஜய் – வைரலாகும் வீடியோ
முதலமைச்சர் விஜய் - அஜித் குமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Sep 2026 12:05 PM IST

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகள் வரை நடிக்கும் நடிகர்களிடையே போட்டி நிலவுகிறதோ இல்லையோ அவர்களின் ரசிகர்களிடையே போட்டி நிலவுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் (Vijay And Ajith Kumar) படங்களிடையே போட்டிகள் அதிகமாக இருந்ததோ இல்லையோ அவர்களின் ரசிகர்களிடையே போட்டி என்பது அதிக அளவில் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியானால் போதும் எந்தப் படம் சிறப்பாக உள்ளது என்று ரசிகர்களிடையே வார்த்தைப் போர் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் போட்டி நடிகர்களாக இவர்களைக் காட்சிப்படுத்தி வந்த நிலையில் நடிகர் விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் குதித்தார். அப்போது விஜய்க்கு ஆதவராக மறைமுகமாக நடிகர் அஜித் குமார் ஆதரவு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கும் நிலையில் விஜய் முதலமைச்சராக ஆன பிறகு அவர் அஜித் குமார் அதிக அளவில் ஈடுபாடுடன் இருக்கும் மோட்டார் ரேஸில் கவனம் செலுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அப்போதே அஜித் குமார் அதற்கு நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து லண்டனில் நடிகர் அஜித் குமார் சமீபத்தில் கார் ரேஸில் கலந்துகொண்ட போது அதனை தொடங்கி வைத்தார்.

அஜித் உடன் ரேஸ் காரில் பயணித்த முதலமைச்சர் விஜய்:

மேலும் நடிகர் அஜித் குமார் ரேஸ் கார் ஓட்டும் போது அருகில் அமர்ந்து சென்றுள்ளார் முதலமைச்சர் விஜய், மேலும் அவர் லண்டனில் சென்றதில் இருந்து முடியும் வரை நடந்த நிகழ்வுகளை தொகுத்து முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… போட்டியாளர்களிடையே பாரபட்சம் காட்டும் விஜய் சேதுபதி – அதிருப்தியில் பார்வையாளர்கள்

முதலமைச்சர் விஜய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மலையாள சினிமாவில் புதிய சாதனைப் படைத்தது பெத்தலேக குடும்ப யூனிட் படம் – வைரலாகும் பதிவு

Follow Us