AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போகிறதா? வைரலாகும் தகவல்

Daredevil Movie Shooting Update | தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் டேர் டெவில். இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போகிறதா? வைரலாகும் தகவல்
அஜித் குமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Sep 2026 08:30 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் இதுவரை மொத்தம் 63 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மற்ற மொழிகளில் சிலப் படங்களில் கேமியோ வேடத்தில் நடித்து உள்ள நடிகர் அஜித் குமார் அதிக அளவில் தமிழ் சினிமாவில் தான் நாயகனாக நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஒரு படமாவது வெளியாகுமா என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் அஜித் குமாரின் 64-வது படத்தின் இயக்குநர் யார் என்பது முடிவாகி பல மாதங்களாக தயாரிப்பு நிறுவனம் அமைவதில் சிக்கல் நிலவி வந்தது. பிறகு அந்தப் படத்தை ஷாலினி அஜித் குமாரே தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது.

டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போகிறதா?

அஜித் குமாரின் டேர் டெவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னையில் நடைபெறவுள்ள கார் மற்றும் பைக் பந்தயப் போட்டிகளில் அஜித் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதால், அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் தொடங்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையில், விளையாட்டுத் துறையில் ஒரு முக்கியப் பொறுப்பை அஜித்திற்கு வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் திரைப்பட வட்டாரங்களில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று பரவி வருகிறது. அண்மையில் விஜய் லண்டன் சென்றிருந்தபோது இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஆல் டைம் அன்பா இருக்கும் என் தங்கமே…. யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளை கடந்தது

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் நடிகர் மிதுன் ஜெய் சங்கர்!

Follow Us