AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரசன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியானது எப்படி? நடிகை யோகலட்சுமி ஓபன் டாக்

Actress Yogalakshmi talks about Arasan movie | தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகை யோகலட்சுமி. இவரது நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அவர் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அரசன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியானது எப்படி? நடிகை யோகலட்சுமி ஓபன் டாக்
சிலம்பரசனுடன் நடிகை யோகலட்சுமிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Sep 2026 16:56 PM IST

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் நடிகை யோகலட்சுமி. இவர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான ஹார்ட் பீட் என்ற இணையதள தொடரில் தேஜூ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து ஹார்ட் பீட் முதல் பாகம் மற்றும் ஹார்ட் பீட் இரண்டாம் பாகத்தில் மிகவும் போல்டான பொண்ணாக நடிகை யோகலட்சுமி நடித்து இருந்தார். இவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். அதன்படி கடந்த 2025-ம் ஆண்டு இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் எழுதி இயக்கிய டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். அந்த கேரக்டரும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை யோகலட்சுமி தற்போது நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக அரசன் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் வெற்றிமாறன் எழுதி இயக்கி வரும் இந்தப் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் கோர்ட் என்ற இணையதள தொடரிலும் நடிகை யோகலட்சுமி கதையின் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியானது எப்படி?

இந்த நிலையில் நடிகை யோகலட்சுமி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியதாவது, ஆரம்பத்தில், சிம்பராசன் சாருடன் இணைந்து நடிக்கவிருப்பது எனக்குத் தெரியாது. ஒரு நாள் வெற்றிமாறன் சார் என்னை அழைத்து, என்னிடம் நேரில் பேச விரும்புவதாகக் கூறினார். அதன்படி நாங்கள் சந்தித்துப் படம் குறித்துப் பேசினோம். அதே நேரத்தில், எனக்கு மற்றொரு பட வாய்ப்பும் வந்தது. நான் வெற்றிமாறன் சாரிடம், சார், எனக்கு இன்னொரு பட வாய்ப்பு வந்திருக்கிறது. உங்களுக்குச் சம்மதமென்றால் நான் இரண்டு படங்களிலும் நடிக்கிறேன். இல்லையென்றால் உங்கள் விருப்பப்படியே செய்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், இந்தப் படத்தில் நடிங்க என்று சொன்னார். அனிருத்தின் இசையில் உருவாகும் என் படத்தில், நீங்கள் சிம்பராசன் சாருடன் இணைந்து நடிப்பீர்கள் என்றும் அவர் என்னிடம் கூறினார். அப்போதுதான் அந்தத் தகவல் எனக்குத் தெரிந்தது என்று தெரிவித்தார்.

Also Read… எதிர்பாராததை எதிர்பாருங்கள்… தொடர்ந்து ட்விஸ்ட்களை தரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நிவின் பாலி நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் எப்போது? – அப்டேட் இதோ

Follow Us