சூர்யாவின் சீன் பட இயக்குநர் ஜித்து மாதவனின் முந்தைய படங்களை பார்த்து இருக்கீங்களா?
Director Jithu Madhavan Previous Movies List | நடிகர் சூரியாவின் நடிப்பில் தற்போது 47-வது படமாக உருவாகி உள்ளது சீன். இந்தப் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் முன்னதாக இயக்கிய படங்கள் என்ன என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் 47-வது படமாக உருவாகி உள்ளது சீன். இந்தப் படத்தினை இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி உள்ளார். மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இவர் நடிகர் சூர்யா உடன் கூட்டணி வைத்த போதே இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் நடிகர் சூர்யா உடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் நஸ்ரியா நசீம், நஸ்லேன் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் படத்தினை நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்து உள்ளது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முன்னதாக முடிவடைந்த நிலையில் வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நேற்று படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்தது. அதன்படி படத்திற்கு சீன் என்று பெயர் வைத்துள்ள நிலையில் படம் வருகின்ற நவம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் முன்னதாக வெளியான படங்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
சீன் பட இயக்குநரின் முந்தைய படங்களை பார்த்து இருக்கீங்களா?
அதன்படி மலையாள சினிமாவில் எழுத்தாளராகவும் இயக்குநராகவும் பிரபலமானவராக வலம் வருபவர் இயக்குநர் ஜித்து மாதவன். இவர் படங்களை இயக்குவது மட்டும் இன்றி மற்ற இயக்குநர்களின் படங்களுக்கு திரைக்கதை எழுதுவதையும் தொடர்ந்து செய்து வருகிறார். இந்த நிலையில் மலையாள சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 03-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ஹாரர் காமெடி பாணியில் உருவாகி இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த ரோமான்சன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார்.




Also Read… திருமணம் செய்யவில்லை என்றாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் – நடிகை திவ்யா ஸ்பந்தனா!
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் இரண்டாவதாக மலையாள சினிமாவில் வெளியான படம் ஆவேசம். நடிகர் ஃபகத் பாசில் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். கேங்ஸ்டர் காமெடி பாணியில் உருவான இந்தப் படம் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… Sivakarthikeyan: சூரி அண்ணனின் கடின உழைப்பு.. மண்டாடி படக்குழுவை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!