AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருமணம் செய்யவில்லை என்றாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் – நடிகை திவ்யா ஸ்பந்தனா!

Actress Divya Spandana recent interview | தென்னிந்திய மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. இவர் சமீபத்தில் திருமணம் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்யவில்லை என்றாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் – நடிகை திவ்யா ஸ்பந்தனா!
நடிகை திவ்யா ஸ்பந்தனாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Sep 2026 16:21 PM IST

கன்னட சினிமாவில் கடந்த 2003-ம் ஆண்டு தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகை திவ்யா ஸ்பந்தனா. இவர் கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் படங்களில் பிசியாக நடித்து வந்தார். மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்தாலும் இவர் அதிக அளவில் கன்னட மொழிப் படங்களிலேயே நடித்து உள்ளார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகை திவ்யா ஸ்பந்தனா நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி ஆகியப் படங்களில் நடித்து உள்ளார். மேலும் நடிகை திவ்யா ஸ்பந்தனா தமிழ் சினிமாவில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான சிங்கம் புலி படத்தின் தான் இறுதியாக நடித்து உள்ளார்.

அதனைத் தொடர்ந்து அதிக அளவில் கன்னட சினிமாவில் படங்களில் நடித்து வந்த நடிகை திவ்யா ஸ்பந்தனா இறுதியாக ரக்த காஷ்மீரா என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் உபேந்திராவிற்கு ஜோடியாக நடிகை திவ்யா ஸ்பந்தனா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கன்னட மொழியில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை திவ்யா ஸ்பந்தனா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திருமணம் செய்யவில்லை என்றாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்:

அதன்படி அந்தப் பேட்டியில் நடிகை திவ்யா ஸ்பந்தனா பேசியதாவது, திருமணம் மற்றும் உறவுகள் குறித்த தனது வெளிப்படையான கருத்துகளை நடிகை திவ்யா ஸ்பந்தனா பகிர்ந்துள்ளார். அதில் திருமணம் மட்டுமே எனது அடையாளத்தை வரையறுப்பதில்லை. திருமணம் செய்துகொள்ளாமலே மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே மிக முக்கியம். இருவருக்கிடையே நல்ல நட்பு, பகிரப்பட்ட விழுமியங்கள் மற்றும் ஆழமான புரிதல் இருந்தால், திருமணம் ஒரு அழகான முடிவாக அமையலாம். ஆனால், எனக்கு ஏற்ற சரியான நபரை நான் இன்னும் சந்திக்கவில்லை, என்று அவர் திருமணம் குறித்துப் பேசுகையில் கூறினார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… நடிகர் ரவி மோகன் பிறந்த நாள் ஸ்பெஷல்… வரிசையாக போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்தும் படக்குழுவினர்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜய் சேதுபதியின் பத்தா படத்திலிருந்து வெளியானது மகளே பாடல்!

Follow Us