AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே… 16 ஆண்டுகளைக் கடந்தது பாஸ் என்கிற பாஸ்கரன் படம் – கொண்டாடும் ரசிகர்கள்

16 Years Of Boss Engira Bhaskaran Movie | தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யாவின் நடிப்பில் வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் முன்னதாக ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற பாஸ் என்கிற பாஸ்கரன் படம் தற்போது 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே… 16 ஆண்டுகளைக் கடந்தது பாஸ் என்கிற பாஸ்கரன் படம் – கொண்டாடும் ரசிகர்கள்
பாஸ் என்கிற பாஸ்கரன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Sep 2026 15:49 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பாஸ் என்கிற பாஸ்கரன் படம். இந்தப் படத்தை இயக்குநர் ராஜேஷ் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை நயன்தாரா நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சந்தானம், சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், ராஜேந்திரன், சுவாமிநாதன், அஷ்வின் ராஜா, விஜயலட்சுமி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஷகீலா, மோனிஷா, ஜீவா, அன்னபூரணி மற்றும் எம். ராஜேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வசன் விஷுவல் வென்ச்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கே. எஸ். சீனிவாசன் தயாரித்து உள்ளார்.

16 ஆண்டுகளைக் கடந்தது ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் படம்:

ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்ததை படக்குழு மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தில் நாயகன் நாயகி காம்போவை விட நண்பர்களான ஆர்யா மற்றும் சந்தானம் இருவருக்குமிடையே இருக்கும் கெமிஸ்ட்ரி மற்றும் நட்பை பார்க்கும் பார்வையாளர்கள் கொண்டாடும் விதமாக இருந்தது. இந்தப் படம் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது கூட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… பிக்பாஸில் கேப்டனிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட முனியம்மா – வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தொடர் வெற்றியை குவித்துவரும் சூரி…. மண்டாட்டி படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம் இதோ!

Follow Us