AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு… எப்போது தெரியுமா?

Vishwanath And Sons Movie OTT Update | நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டு உள்ளது.

ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு… எப்போது தெரியுமா?
விஸ்வநாத் & சன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Sep 2026 12:23 PM IST

தமிழ் சினிமாவில் ரசிகரக்ளிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்த 2026-ம் ஆண்டில் முதலாவதாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் கருப்பு சாமியாக நடிகர் சூர்யா கலக்கி இருப்பார். படம் மாபெரும் வெற்றியைப் பெற்றதுடன் சூர்யாவின் சினிமா கெரியரில் பல சாதனைகளைப் படைத்த படமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் இரண்டாவதாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம்.

இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். மேலும் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து தொடர்ந்து ரசிகரக்ளிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் படம் வெளியாகி 25 நாட்களில் ரூபாய் 260 கோடிகளை வசூலித்து சாதனைப் படைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு:

தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகி வரும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வருகின்ற 11-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. இந்த பதிவு ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பூஜையுடன் தொடங்கியது மாரி செல்வராஜின் மஞ்சனத்தி படம் – தொடங்கி வைத்தார் இசைஞானி இளையராஜா!

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 3 ஆண்டுகளை நிறைவு செய்தது ஷாருக்கானின் ஜவான் படம்… பார்ட் 2 கேட்கும் ரசிகர்கள்!

Follow Us