பூஜையுடன் தொடங்கியது மாரி செல்வராஜின் மஞ்சனத்தி படம் – தொடங்கி வைத்தார் இசைஞானி இளையராஜா!
Manjanathi movie kicks off with a pooja | இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் மஞ்சனத்தி. இந்தப் படத்தின் படப்பிடிப்பை இன்று இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ். பிரபல இயக்குநர் ராமின் உதவியாளராக இருந்து தற்போது முன்னணி இயக்குநராக முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இயக்குநர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தென்னிந்திய மொழிகளிலும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதி இயக்கிய படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. மேலும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் பைசன் காளமாடன்.
இந்தப் படம் ஸ்போர்ட்ஸ் ட்ராமா பணியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் மற்றும் அவரை சுற்றி நடந்த சம்பவங்கள் குறித்து படங்களின் கதையை எழுதி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




பூஜையுடன் தொடங்கியது மாரி செல்வராஜின் மஞ்சனத்தி படம்:
அதன்படி இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் மஞ்சனத்தி. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க உள்ளார். மேலும் இந்த மஞ்சனத்தி படத்தில் நடிகர்கள் பிரியங்கா மோகன், கயாடு லோஹர், கதிர், விது, பூர்ணிமா ரவி என பலர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த நிலையில் இந்த மஞ்சனத்தி படத்தின் படப்பிடிப்பை இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பான பதிவை இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் இன்று முதல் மஞ்சணத்தியின் தினங்களை தொடங்கிவைத்த எங்கள் இசைஞானிக்கு என்றைக்குமான எங்கள் நன்றியும் அன்பும் என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
இன்று முதல் மஞ்சணத்தியின் தினங்களை தொடங்கிவைத்த எங்கள் இசைஞானிக்கு என்றைக்குமான எங்கள் நன்றியும் அன்பும்!! #Manjanathi 🌳💛#Shootbeginstoday @ilaiyaraaja @navvistudios @divyamari @SkandaPictures @Ezhil_DOP @ramu_thangaraj @Editorselva @Kathir @priyankaamohan @11Lohar… pic.twitter.com/1z8EWtO7Fi
— Mari Selvaraj (@mari_selvaraj) September 7, 2026
Also Read… 19 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 – மொத்த லிஸ்ட் இதோ