19 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 – மொத்த லிஸ்ட் இதோ
Bigg Boss Tamil Season 10 | தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 19 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சின்னத்திரையில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக உள்ளது. பொதுவாக நம்மிடையே மற்றவர்களின் விசயங்களை தெரிந்துகொள்வதற்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். இது மனிதனாக பிறந்த அனைவருக்கும் இருக்கும். சிலர் அதனை வெளிப்படையாக காட்டிக் கொள்வார்கள் பலர் அடுத்தவங்க விசயம் நமக்கு எதுக்கு என்று அதே விசயத்தில் ஆர்வமாகவும் இருப்பார்கள். இப்படி மனிதர்களிடையே உள்ள ஒரு குணத்திற்கு தீனி போடும் விதமாக தொடங்கப்பட்டது தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து இதுவரை 9 சீசன்கள் முடிவடைந்து தற்போது 10-வது சீசனை தொடங்கி உள்ளது நிகழ்ச்சி குழு. ஒவ்வொரு சீசனிலும் பல விமர்சனக்கள் எழுந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு மக்களிடையே வரவேற்பு குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இதுவரை பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 9 சீசன்களை நிறைவடைந்த நிலையில் இன்று முதல் 10-வது சீசன் மிகவும் பிரமாண்டமாக தொடங்கி உள்ளது. தினமும் இரவு 09.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் ஜியோ ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் லைவ் ஒளிபரப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் மொத்தம் எத்தனை போட்டியாளர்கள் யார் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.




19 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 10:
இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வெள்ளித்திரை, சின்னத்திரை மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் மட்டும் இன்றி காமெனர்களும் கலந்துகொண்டுள்ளனர். அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் லக்ஷ்மி பிரியா, சாதிகா, பிரித்விநாத், ஜாவித், ஜான்சன், முனியம்மா, ஷமா, முத்தழகி, அஸ்மிதா, அவிநாஷ், ப்ளாக் பாண்டி, கேபிஒய் வினோத், சாந்தினி, சாவின்யா, குமரன், ராகவ், தன்யா, முகேஷ் மற்றும் அன்சர் என மொத்தம் 19 போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… Bigg Boss Tamil Winner List: பிக்பாஸ் தமிழ் சீசன் 1 முதல் 9 வரை வெற்றியாளர்களின் பட்டியல் இதோ