Joy Crizildaa: பிக் பாஸ் முக்கியமல்ல… குழந்தைதான் முக்கியம் – ஜாய் கிரிசில்டா வெளிப்படையான அறிவிப்பு!
Joy Crizildaa refuses Bigg Boss 10: தமிழ் சினிமாவில் பிரபலமான ஆடை வடிவமைப்பாளராக இருந்துவருபவர் ஜாய் கிரிசில்டா. இவர் மாதம்பட்டி ரங்கராஜன் 2வது மனைவி. இவர் பிக் பாஸ் சீசன் 10ல் பங்கேற்பதாக கூறப்பட்டுவந்த நிலையில், அதில் கலந்துகொள்வதில்லை என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜன் (Madhampatty Rangaraj) 2வது மனைவியாகவும், பிரபலமான ஆடை வடிவமைப்பாளராக இருந்துவருபவர் ஜாய் கிரிசில்டா ((Joy crizildaa). இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்களின் ஆடை வடிவமைப்பாளராக இருந்துவந்தவர். இவர் மாதம்பட்டி ரங்கராஜை 2வது திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்கள் இருவருக்கும் ராகா ரங்கராஜ் (Raha Rangaraj) என்ற மகனும் இருக்கிறார். இந்த தம்பதி கடந்த 2025ம் ஆண்டு ஆரம்பத்தில் திருமணம் செய்த நிலையில், சில மாதங்களிலே தாங்கள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். பின் சில மாதங்களாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இருவருக்குமே பிரச்சனை இருந்த நிலையில், தற்போது ஒன்றுசேர்ந்துள்ளனர்.
அந்த விதத்தில் ஜாய் கிரிசில்டா, பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெறுவதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவந்த நிலையில், அதில் கலந்துகொள்வதை முழுவதுமாக மறுத்துள்ளார். மேலும் தனக்கு பிக் பாஸை விடவும் தனது குழந்தைதான் முக்கியம் என அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் நான் நடித்த முதல் படம் ட்ராகன் இல்லை… கயாடு லோஹர் ஓபன் டாக்
பிக் பாஸ் சீசன் 10ல் கலந்துகொள்ளவில்லை என ஜாய் கிரிசில்டா தெரிவித்தது பற்றி வைரலாகும் பதிவு:
#JoyCrizildaa has decided not to enter the Bigg Boss house, choosing her little one Ragha first.
A heartfelt decision by a mother.#BiggBossTamil10 #BiggBoss10 #BiggBossTamil #ItsAboutCinema pic.twitter.com/MhIgPDrSqa
— Its About Cinema (@Dksview) September 5, 2026
அந்த பதிவில் ஜாய் கிரிசில்டா, “கடந்த சில நாட்களாக, நான் பிக் பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் நுழையப் போகிறேன் என்ற செய்தி வைரலாகப் பரவி வருகிறது. உண்மையைச் சொல்லப்போனால், எனக்குக் கிடைத்த அன்பு, ஆதரவு, அழைப்புகள், செய்திகள், தனிப்பட்ட செய்திகள் மற்றும் வாழ்த்துகளின் அளவு என்னை நெகிழ வைத்துவிட்டது கடந்த சில நாட்களாக, நான் பிக் பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் நுழையப் போகிறேன் என்ற செய்தி வைரலாகப் பரவி வருகிறது. உண்மையைச் சொல்லப்போனால், எனக்குக் கிடைத்த அன்பு, ஆதரவு, அழைப்புகள், செய்திகள், தனிப்பட்ட செய்திகள் மற்றும் வாழ்த்துகளின் அளவு என்னை நெகிழ வைத்துவிட்டது.
இதையும் படிங்க: எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு.. அரசன் திரைப்படத்தில் நடிப்பது குறித்து பேசிய பிரியங்கா மோகன்!
முதலில், இத்தகைய ஒரு அற்புதமான வாய்ப்புக்காக என்னைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுத்த விஜய் டிவிக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஆனால், நான் பிக் பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் நுழையப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதற்கான முக்கிய காரணம் என் மகன் ராகா. அவன் இன்னும் மிகவும் சிறியவன், அவனை விட்டுவிட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைப்பது ஒரு தாயாக எனக்குச் சரியாகத் தோன்றவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.