என்னப்பா இது வீடா இல்ல அரண்மனையா ?.. இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் சீசன் 10 ஹவுஸ் புகைப்படங்கள்!
Bigg Boss 10 Tamil house photos: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது விரைவில் தொடங்கவுள்ளது. மாற சீசன்களை போல இல்லாமல், இந்த சீசன் தொடங்கும்போதே புதுவிதமாகவே உள்ளது. இன்ஸ்டாகிராம் பிரபலங்களை அழைத்து, இந்த பிக் பாஸ் சீசன் 10 வீட்டின் டிசைன்களை ரிவியூ செய்துள்ளனர். அந்த விதத்தில் இந்த பிக் பாஸ் சீசன் 10 ஹவுஸின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
சின்னத்திரை மக்கள் மத்தியில் மிகவும் பிரம்மாண்டமான மற்றும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது அமெரிக்காவில் ஒளிபரப்பாகிவரும் “பிக் பிரதர்” (Bigg Brother) என்ற நிகழ்ச்சியில் தழுவலாகும், கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு போட்டியாளர்களை ஒரே வீட்டில் அடைத்துவைத்து, அவர்களிடையே நடக்கும் சண்டைகள் மற்றும் போட்டிகளை மையமாக கொண்டு இந்த நிகழ்ச்சியானது அமைக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இந்தியில் கடந்த 20-06ம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமான நிலையில், இதுவரை 19 சீசன்கள் முடிவடைந்துள்ளது. அந்த விதத்தில், தமிழில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது வரும், 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதியில் ஒளிபரப்பாக காத்திருக்கிறது. அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியின்மீது மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.
எந்த சீசன்களிலும் இல்லாமல், இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது வித்தியாசமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இந்த வீட்டில் நுழைவதற்கு முன்னே, இன்ஸ்டாகிராம் பிரபலங்களை வைத்து, புரோமோஷன் செய்யும் விதமாக உள்ளது. இந்நிலையில் இந்த வீடு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ஃபேன்டஸி த்ரில்லர் கதையில்… ஜி.வி.பிரகாஷ் – கயாடு லோஹரின் இம்மார்ட்டல் பட ஹிட்டா? ஃபிளாப்பா?
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொடர்பாக இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு:
The calm before the storm🏠💥#BiggBossTamil10 #BiggBossTamil pic.twitter.com/ePJN0a4MUh
— Sekar (@Sekar_offl) September 4, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 வீட்டில், மற்ற சீசன்களை போலவே, சமையலறை, பெட் ரூம், டைனிங் ஏரியா, பாத் ரூம், கன்பெக்ஷன் ரூம் என எல்லாமே இருக்கிறது. ஆனால் மற்ற சீசன்களை விடவும், இந்த சீசன் பிக் பாஸ் வீடு மிகவும் பெரியதாக உள்ளது. மேலும் இந்த சீஸிங்கில் வீடு முழுவதும் மிகவும் கலர் ஃபுல்லாகவும் உள்ளது.
இதையும் படிங்க: பிக்பாஸ் தமிழ் சீசன் 10 கலந்துகொள்ளும் முன்னாள் போட்டியாளரின் மனைவி? வைரலாகும் தகவல்
பிக் பாஸ் சீசன் 10 வீடு குறித்து இணையத்தில் வைரலாக வீடியோ பதிவு:
Big Boss House Season 10 #BiggBossTamil10 #BiggBossTamil pic.twitter.com/rTm0uzMjxH
— Lilith (@Mystery_Luvv_) September 4, 2026
இந்த சீசனில் மொத்தமாக 21 போட்டியாளர்கள் கலந்துகொள்கிறார்களாம். அதில் பிக் பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சியின் மூலம் முனியம்மாள், கரீஷ்மா மட்டும் ஜேசன் என்ற மூன்று போட்டியாளர்களும், அதை தொடர்ந்து கிட்டத்தட்ட 18 போட்டியாளர்கள் பிரபலங்கள் கலந்துகொள்கிறார்களாம். அதில் விஜய் டிவி சீரியல் நடிகர்கள் அதிகமாக உள்ளதாக தெரிகிறது. நடிகர் நவீன், ஆர்யன், புவியரசு மற்றும் பல்வேறு நடிகர்களும் இணைந்து இந்த போட்டியில் கலந்துகொள்கிறார்களாம். இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவருகிறது.