AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 கலந்துகொள்ளும் முன்னாள் போட்டியாளரின் மனைவி? வைரலாகும் தகவல்

Bigg Boss Tamil Season 10 Contestant Update | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 கலந்துகொள்ளும் முன்னாள் போட்டியாளரின் மனைவி? வைரலாகும் தகவல்
பிக்பாஸ் தமிழ் சீசன் 10Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Sep 2026 10:00 AM IST

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய நிலையில் தொடர்ந்து 9 சீசன்கள் இதுவரை முடிவடைந்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் முதல் 7 சீசன்களை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் அடுத்தடுத்து 8 மற்றும் 9-வது சீசன்களை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் தற்போது ஒளிபரப்பாக உள்ள 10-வது சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆங்கிலத்தில் பிக் பிரதர் என்று மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக உள்ளதை தற்போது இந்தியாவில் பிக்பாஸ் என்று தொடங்கப்பட்டு தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. முதலில் இந்தியாவில் இந்தி மொழியில் வெளியான இந்த நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டில் தென்னிந்திய மொழிகளில் தொடங்கப்பட்டது.

தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் இந்த நிகழ்ச்சி பொதுவாக அக்டோபர் மாதம் தொடங்கி மூன்று மாதங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகும். ஆனால் இந்த முறை செப்டம்பர் மாதமே இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி வருகின்ற செப்டம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 20 திரையுலக பிரபலங்கள் மற்றும் 3 காமனர்கள் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் தமிழில் கலந்துகொள்ளும் முன்னாள் போட்டியாளரின் மனைவி:

இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் யார் எல்லாம் கலந்துகொள்ள உள்ளனர் என்று தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நடிகர் ரஞ்சித். இவர் கோலிவுட் சினிமாவில் பலப் படங்களில் நடித்து உள்ளார். இந்த நிலையில் இவரது மனைவியும் நடிகையுமான பிரியா ராமன் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த தகவல் உண்மையா வதந்தியா என்பது வருகின்ற 06-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு நிகழ்ச்சி தொடங்கும் போது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஹாய் படத்தின் சக்சஸ் மீட்டில் கலகலப்பாக பேசிய கவின்… வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஐ அம் கேம்… துல்கர் சல்மானுக்கு மீண்டும் ஒரு வெற்றிப் படமா? எக்ஸ் விமர்சனம் இதோ!

Follow Us