AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஹாய் படத்தின் சக்சஸ் மீட்டில் கலகலப்பாக பேசிய கவின்… வைரலாகும் வீடியோ

Hi Movie Success Meet | நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படம் ஹாய். இந்தப் படத்தின் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அந்த விழாவில் நடிகர் கவின் பேசியது வைரலாகி வருகின்றது.

ஹாய் படத்தின் சக்சஸ் மீட்டில் கலகலப்பாக பேசிய கவின்… வைரலாகும் வீடியோ
கவின்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Sep 2026 10:54 AM IST

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கவின். இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் போதே இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இந்த நிலையில் வெள்ளித்திரையில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு அந்த ரசிகர்களின் பட்டாளம் விரிவடைந்தது என்றே சொல்லலாம். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் கவினின் நடிப்பில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவரது நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் ஹாய். இயக்குநர் விஷ்ணு எடவன் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடலாசிரியாக வலம் வந்த விஷ்ணு எடவன் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக நடித்தது மட்டும் இன்றி படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோடும் நிலையில் படக்குழு நேற்று வெற்றி விழாவை கொண்டாடி உள்ளனர். அந்த விழாவில் நடிகர் கவின் பேசியது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

ஹாய் படத்தின் சக்சஸ் மீட்டில் கலகலப்பாக பேசிய கவின்:

சமீபத்தில் வெளியான 5-6 படங்கள் மிகச் சிறப்பாக இருந்தன. மக்களிடம் பணம் இருக்கும்போதுதான் படங்கள் நன்றாக ஓடும் என்று நினைத்து நான் பயந்தேன். ஆனால், மாத இறுதியில் வெளியான ஒரு படத்திற்கும் மக்கள் ஆதரவு அளித்தனர். அனைத்து கலைஞர்கள் மற்றும் 10-15 கேரவன்களுடன் (caravans) இப்படத்தின் படப்பிடிப்பை பிரம்மாண்டமாகத் தொடங்கினோம். இடைவேளைக் காட்சியைப் படமாக்கிவிட்டு, மூன்று மாதங்களில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தோம்.

ஆனால், 10 நாட்களிலேயே படப்பிடிப்பு நின்றுவிட்டது. மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியபோது, ​​இயக்குனர் படப்பிடிப்புத் தளத்தின் காட்சிகளைத் தனியாகப் படம்பிடித்து தனது வருங்கால மனைவியின் வீட்டிற்கு அனுப்பிக்கொண்டிருந்தார். படம் நடந்து கொண்டிருக்கிறது, (அதனால்) கல்யாணத்தை நடத்திவிடலாம் என்பதுபோல அவர் இருந்தார் என்று கலகலப்பாக நடிகர் கவின் பேசியது வைரலாகி வருகின்றது.

Also Read… தனி ஒருவனா? எம்.குமாரனா? கார்த்தியுடனான புது படம் எப்படி எப்படி இருக்கும்? – மோகன் ராஜா விளக்கம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்திற்கு சென்சார் பிரச்சனை? வைரலாகும் தகவல்

Follow Us