Kathir: என்னோட ஐஆம் கேம் பட தொடக்கமே லோகேஷ்தான் – கதிர் நெகிழ்ச்சி!
Kathir On Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும், படங்களில் முக்கியமான வேடங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்துவருபவர் கதிர். இவர் துல்கர் சல்மானின் ஐஆம் கேம் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்க காரணம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் என கதிர் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்களை ஈர்த்துவந்தவர் கதிர் (Kathir). இவர் முதல்வர் விஜய்யுடன் (CM Vijay) பிகில் (Bigil) படத்தில் அவரின் நண்பனாக நடித்திருந்தார். இதற்க்கு முன் இவர் இயக்குநர் அட்லீ (Atlee) முதல் மாரி செல்வராஜ் உட்பட பல்வேறு நட்சத்திர இயக்குநர்களுடனும் இணைந்து படங்களில் பணியாற்றியிருக்கிறார். இவர் கடந்த 2013ம் ஆண்டில் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், “மத யானை கூட்டம்” (Madha Yaanai Koottam) என்ற படத்தின் மூலம் நாயகனாக நுழைந்தார். இதன் பின் கிருமி, என்னோடு விளையாடு, பரியேறும் பெருமாள் மற்றும் சர்பத் போன்ற படங்களிலும் நாயகனாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது திரைப்படங்களில் முக்கியமான வேடங்களிலும் இவர் நடித்துவருகிறார். அண்மையில் லிங்கம் (Lingam) என்ற வெப் தொடரிலும் நடித்து ஹிட் கொடுத்திருந்தார்.
இந்த வகையில், மலையாளத்தில் இவர் நுழைந்துள்ள 2வது படம்தான் ஐஆம் கேம் (Im Game). இதற்கு முன் மீஷா என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் ஐஆம் கேம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருந்த நிலையில், அதில் பேசிய கதிர் ஐஆம் கேம் படத்தில் நடிக்க காரணம் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) என தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: விக்ரம் பிரபு படத்தில் நடிகையாக அறிமுகமாகும் அமலா ஷாஜி..!
ஐஆம் கேம் பட ஆடியோ லான்ச்சில் லோகேஷ் கனகராஜ் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய கதிர்:
நடிகர் கதிர் அதில், “எனக்கு ஐஆம் கேம் படத்தின் ஆரம்பம் எங்கே என்றால், ஒருநாள் இயக்குநரும் நடிகருமான லோகேஷ் எனக்கு கால் பண்ணாரு, அப்போது என்னிடம், நீ ஆர்டிஎக்ஸ் படம் பார்த்திருக்கியா? என கேட்டாரு. நானும் பார்த்திருக்கேன், சூப்பராக இருக்குமே-னு சொன்னேன். அப்போது, அந்த இயக்குநர் உன்னிடம் பேசவேண்டுமாம்?, அவர் இயக்கும் புது படத்தின் கதையை கேட்டேன்.
இதையும் படிங்க: ஜீவாவின் தகப்பன் படத்தின் ஷூட்டிங் ஓவர் – கொடுத்ததுடன் வெளியான வீடியோ!
கண்டிப்பா நீ பண்ணனும், அவரை நேரில் சந்தித்து பேசு என சொன்னார். நான் இயக்குநர் நகாஸை நேரிலும் சந்தித்தேன். அவருடன் புது படம் என்றால் வெட்டு குத்து எல்லாம் இருக்கும் என நினைத்தேன். ஆனால் அவரை நேரில் பார்க்கும்போது, இவரா அந்த படத்தை நினைக்கும்படி இருந்தார். சத்தமாக கூட பேசமாட்டாரு. ஆனால் அவரிடம் ஒரு கமர்ஷியல் படம் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற சிந்தனை இருக்கும்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
லோகேஷ் கனகராஜ் குறித்து நெகிழ்ச்சியாக கதிர் பேசியது தொடர்பான வீடியோ பதிவு:
#Kathir: I got a call from Director and Actor #LokeshKanagaraj📞#Lokesh: Hope you watched RDX. That director wants to talk to you. I have heard #ImGame story. You don’t want to listen to the story, you do it, I’m saying this with guarantee💯#Kathir: I haven’t met the director…
— AmuthaBharathi (@CinemaWithAB) August 31, 2026
இயக்குநர் நகாஸ் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்துள்ள புது படம்தான் ஐஆம் கேம். இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இதில் கதிர், கயாடு லோஹர், சம்யுக்தா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.