AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Amala Shaji: விக்ரம் பிரபு படத்தில் நடிகையாக அறிமுகமாகும் அமலா ஷாஜி..!

Amala Shaji Acting Debut: தமிழ் மற்றும் மலையாள மக்கள் மத்தியில் பிரபலமான இன்ஸ்டாகிராம் பேமஸாக இருந்துவருபவர் அமலா ஷாஜி. இவர் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை தனது ரசிகர்களை கவர்ந்தவருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளாராம். அது குறித்த தகவல் வைரலாகிவருகிறது.

Amala Shaji: விக்ரம் பிரபு படத்தில் நடிகையாக அறிமுகமாகும் அமலா ஷாஜி..!
அமலா ஷாஜியின் நடிப்பு அறிமுகம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 31 Aug 2026 10:35 AM IST

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அமலா ஷாஜி (Amala Shaji). கேரளாவை சேர்ந்த இவர், தனது தங்கையுடன் வீடியோவில், நடனமாடி மற்றும் ரசிகர்களை வகையில் புகைப்படங்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேல் இன்ஸ்டாகிராமில் பேமஸ் செலிபிரிட்டியாக (Instagram Famous Celebrity) இருந்துவருகிறார். இவர் பொதுவாக எந்த ரியாலிட்டி நிகழ்ச்சி மற்றும் வேறு எதுவும் நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்ததில்லை. அந்த விதத்தில், தற்போது இவர் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளாராம். நடிகர் விக்ரம் பிரபுவின் (Vikram Prabhu_ நடிப்பில் உருவாகிவரும், 26வது திரைப்படத்தில் இன்ஸ்டா செலிபிரிட்டி அமலா ஷாஜி முக்கியமான் வேடத்தில் நடிக்கிறாராம்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா ஷாஜி பகிர்ந்துள்ளார். விக்ரம் பிரபுவின் 26வது (Vikram Prabhu 26) படமானது சிறப்பான மற்றும் தங்கம் கொள்ளை தொடர்பான கதைக்களத்தில் உருவாகியவருகிறதாம்.

இதையும் படிங்க: ரவி தேஜாவின் திரைப்பயணத்திலேயே இருமுடி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது – ஜிவி பிரகாஷ் குமார்

விக்ரம் பிரபுவின் 26வது திரைப்படத்தில் நடிப்பது குறித்து அமலா ஷாஜி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Amu 🐣 (@_amalashaji_)

அந்த பதிவின் கீழ் அமலா ஷாஜி, “நான் ஒரு காலத்தில் கற்பனை மட்டுமே செய்த ஒரு கனவு, இறுதியாக நனவாகிறது. என் முதல் திரைப்படம், நான் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு தருணம். இந்த அழகான திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் அளவற்ற மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் அளவற்ற நன்றியுணர்வுடன் இருக்கிறேன்.

இதையும் படிங்க: இம்மார்ட்டல் பட டைட்டில் முதலில் அதுதான்.. ஓபனாக பேசிய ஜி.வி.பிரகாஷ்!

எனக்கு இந்த வாய்ப்பை வழங்கி, இந்தத் தொடக்கத்தை இவ்வளவு சிறப்பானதாக மாற்றிய எங்கள் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றி. மேலும், இந்தப் பயணம் முழுவதும் எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்த என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” என அந்த இன்ஸ்டாகிராம் குறிப்பிட்டுள்ளார்.

விக்ரம் பிரபுவின் 26வது திரைப்படம்:

தமிழில் விக்ரம் பிரபுவின் நடிப்பில் இறுதியாக சிறை என்ற படம் வெளியாகி சிறப்பான வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு பின் இயக்குநர் சித்தார்த் இயக்கத்திலும், தயாரிப்பாளர் ராகுலின் தயாரிப்பிலும் அவர் இணைந்திருந்த புது படம்தான் விக்ரம்பிரபு26. இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கிய நிலையில், இப்படத்தின் முதல் பார்வை இன்று (31/08/2026) வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us