GV Prakash: இம்மார்ட்டல் பட டைட்டில் முதலில் அதுதான்.. ஓபனாக பேசிய ஜி.வி.பிரகாஷ்!
GV Prakashs Immortal Movie: இசையமைப்பாளராக தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிரபலமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரின் நடிப்பில் தமிழில் வித்தியாசமாக ஹாரர் கதையில் உருவாகியுள்ள புது படம்தான் இம்மார்ட்டல். இப்படத்திற்கு ஆரம்பத்தில் வைக்கப்பட்ட டைட்டில் என்ன என்பது குறித்து, ஜி.வி.பிரகாஷ் குமார் மனம் திறந்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash) சினிமாவில் வெறும் இசையமைப்பாளராக மட்டுமில்லாம, நடிகராகவும் படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் ஹேப்பி ராஜ் (Happy raj). இந்த படமானது அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் வெளியானாலும், திரையரங்குகளில் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின், ஜி.வி.பிரகாஷ் குமாரின் நடிப்பில், 2026ம் ஆண்டில் 2வது வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் இம்மார்ட்டல் (Immortal). இதை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா (Mariyappan Chinna) இயக்க, ட்ரைடென்ட் என்ற நிறுவனமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இதில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) நடித்துள்ளார்.
இவர்கள் இருவரின் ஜோடி இப்படத்தின் மூலமாக முதல் முறையாக இணைந்துள்ளது என கூறலாம். இந்த படம் ஹாரர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், வரும் 2026 ஆண்டு செப்டம்பர் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்று நடந்த நிலையில், அதில் பேசிய ஜி.வி.பிரகாஷ் குமார் இம்மார்ட்டல் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் பற்றி பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ஜீவாவின் தகப்பன் படத்தின் ஷூட்டிங் ஓவர் – கொடுத்ததுடன் வெளியான வீடியோ!
இம்மார்ட்டல் திரைப்படம் குறித்து வெளிப்படையாக பேசிய ஜி.வி.பிரகாஷ் குமார்:
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஜி.வி.பிரகாஷ் குமார், “இது மிகவும் வித்தியாசமான படம். இது ஒரு வாம்பயர் படம். இது இந்திய சினிமாவுக்கு ஒரு புதிய வகை.. நாங்கள் ஆரம்பத்தில் இதற்கு ‘சாகா வரம்’ என்று டைட்டில் வைத்தோம், அதன் பிறகு இம்மார்ட்டல் என மாற்றினோம். உயிரினங்களையும் அரக்கர்களையும் உருவாக்க, சிஜி-க்காக மட்டுமே ஒரு வருடம் காத்திருந்தோம்.
இதையும் படிங்க: ரவி தேஜாவின் திரைப்பயணத்திலேயே இருமுடி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது – ஜிவி பிரகாஷ் குமார்
இதன் கதை சொல்லும் விதமே ஒரு ஹாலிவுட் படம் போல இருந்தது. இது ஏதாவது ஹாலிவுட் படத்தின் நகலா என்று கூட நான் கேட்டேன், இல்லை. இது ஒரு புதிய முயற்சி. இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்” என அதில் அவர் தெரிவித்திருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
இம்மார்ட்டல் திரைப்படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார் பகிர்ந்த பதிவு:
Here is #immortal trailer for all of u https://t.co/1MXSxmnKTQ
— G.V.Prakash Kumar (@gvprakash) August 26, 2026
இந்த இம்மார்ட்டல் படமானது காதல் மற்றும் ஹாரர் போன்ற கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை கயாடு லோஹர் பேயாக நடித்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது ஆர்வத்தை அதிகரித்தது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 04ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.