AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரவி தேஜாவின் திரைப்பயணத்திலேயே இருமுடி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது – ஜிவி பிரகாஷ் குமார்

GV Prakash Kumar about Ravi Tejas cinema career | தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி தேஜா. இவரது சினிமா வாழ்க்கை குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரவி தேஜாவின் திரைப்பயணத்திலேயே இருமுடி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது – ஜிவி பிரகாஷ் குமார்
இருமுடிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Aug 2026 18:40 PM IST

கன்னட சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி தேஜா. இவர் சினிமாவில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் கடந்த 1999-ம் ஆண்டு முதல் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து நாயகனாக நடித்த பிறகு இவரது நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் நடிகர் ரவி தேஜா நாயகனாக மட்டும் இன்றி படஙக்ளை தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் இருமுடி. இயக்குநர் ஷிவ நிர்வனா எழுதி இயக்கிய இந்தப் படம் அப்பா மகள் பாசத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இருமுடி பட வெற்றி தெலுங்குத் திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியது:

இந்த நிலையில் இருமுடி படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இருமுடி படம் குறித்தும் நடிகர் ரவி தேஜாவின் சினிமா கெரியர் குறித்தும் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் பேசியதாவது, இருமுடி ரவி தேஜாவின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் வெற்றி தெலுங்குத் திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமரன், அசுரன் போன்ற படங்களின் வெற்றிக்கு இணையான தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் கதையைக் கேட்டவுடனேயே, இது மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று எனக்குத் தோன்றியது.

கதையைக் கேட்டபோதே நான் அதுபற்றி ட்விட்டரிலும் பதிவிட்டிருந்தேன். ரவி தேஜா மீதான ரசிகர்களின் பெரும் ஆதரவையும், அவருக்கான அந்த மாஸ் வரவேற்பையும் இப்படம் மீண்டும் கொண்டு வந்துள்ளது. திரையரங்குகளில் இரண்டு பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பு மிகவும் அபாரமாக இருந்தது. ரசிகர்கள் அப்பாடல்களை மீண்டும் ஒருமுறை ஒலிபரப்புமாறு கேட்டுக்கொண்டனர். இத்தகைய வரவேற்பைக் காண்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

Also Read… சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் கூட்டணி பட ஷூட்டிங் நிறைவு – வீடியோவை வெளியிட்ட படக்குழு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தி காமன் மேன் ஷோ மூலம் பிக் பாஸ் சீசன் 10ல் நுழையும் போட்டியாளர்கள் இவர்களா?

Follow Us