AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

25 வருச உழைப்பு… சூரியின் சினிமா பயணத்தை பாராட்டிய ஆர்.ஜே.பாலாஜி

RJ Balaji Praised Soori | நடிகர் சூரியின் நடிப்பில் உருவாகி அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மண்டாட்டி. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஆர்.ஜே.பாலாஜி சூரி குறித்து பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

25 வருச உழைப்பு… சூரியின் சினிமா பயணத்தை பாராட்டிய ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Aug 2026 16:06 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நாயகனாகவும் வலம் வருபவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. இவரும் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது இந்த உயரத்திற்கு எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த 2026-ம் ஆண்டில் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி வில்லனாக நடித்தப் படம் கருப்பு. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்தார். தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் இந்த கருப்பு படம் தான் அதிக அளவில் வசூலை ஈட்டிய படமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்திற்கு ரசிகர்கள் காத்திருந்தாலும் அவர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் சூர்யா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரின் சினிமா கெரியரில் முக்கியமான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்குநர் பணியில் இருந்து சற்று விலகி மற்ற இயக்குநர்களின் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் அவர் நாயகனாக நடிக்க உள்ள அடுத்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் மண்டாட்டி படத்தின் விழாவில் கலம்துகொண்ட ஆர்.ஜே.பாலாஜி நடிகர் சூரி குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூரியின் சினிமா பயணத்தை பாராட்டிய ஆர்.ஜே.பாலாஜி:

ஒரு படத்தில் நடிகர் விஜய் குமார் சார் கார் வரும், அந்த கார் வந்து 10 பேரா இடிச்சிட்டு போகும். அதுல ஒருத்தர் பறந்து போவார். அது தான் சூரி. 1999-ல சங்கமம் படத்தில வந்தது. அதுல இருந்து ஒருத்தர் ஹீரோவா ஆகறதுக்கு சினிமால ஒரு இடம் கிடைக்க 25 வருஷம் ஆயிடுச்சு. விட்டே குடுக்கல, ஒவ்வொரு இடத்துலயும் ரொம்ப ஈஸியா ஒரு ஜூனியர் நடிகரா, கார்பெண்டரா, எலக்ட்ரீஷியனா, காமெடி நடிகரா இருந்து இடத்துக்கு வந்திருக்காரு.

இந்த இடத்துல இருந்து தள்ளுறதுக்கு நிரய விஷயம் நடந்திருக்கலாம். ஆனா இந்த இடம் இவர் விடலை. இந்த இடத்தை இருக்கி பிடிச்சு, 2024-ல விடுதலை பாடம் வந்தது. கிட்டத்தட்ட 25 வருஷம் ஆச்சு, அவர் ஹீரோ-ஆகா வந்தார். இவர் ஒரு பெரிய இன்ஸ்பரேஷன் என்று நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… நாகர்ஜுனா படத்தில் வில்லனாகும் நடிகர் அசோக் செல்வன்? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சூரியின் பர்த்டே.. மண்டாடி படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்!

Follow Us