அருள்நிதி நடிப்பில் சூப்பர் ஹி அடித்த டைரி படம் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது – இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு
4 Years Of Diary Movie | தமிழ் சினிமாவில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் முன்னதாக அருள்நிதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் டைரி.
தமிழ் நாட்டில் மிகப்பெரிய அரசியல் குடும்பத்தில் பிறந்துவிட்டு நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவில் நாயகனாக தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் அருள்நிதி. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன முதல் படத்தில் இருந்து தற்போது வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் அருள்நிதி நடிப்பில் முன்னதாக தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் டைரி. இந்தப் படம் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் பாணியில் உருவாகி இருந்தது. இயக்குநர் இன்னசி பாண்டியன் இந்த டைரி படத்தை எழுதி இயக்கி இருந்தார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் அருள் நிதி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
ஊட்டியில் தேனிலவுக்கு சென்ற தம்பதி கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கு நீண்டுகொண்டே இருக்கின்றது. அதற்கு தீர்வு கிடைக்காத நிலையில் அந்த வழக்கை விசாரிப்பதற்காக காவல்துறை அதிகாரியாக வருகிறார் அருள்நிதி. அப்படி அவர் விசாரிக்க வரும்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றது. இந்த படம் அருள் நிதி நடிப்பில் வெளியான படங்களில் சிறப்பான வரவேற்பைப் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.




சூப்பர் ஹி அடித்த டைரி படம் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது:
இந்த நிலையில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த டைரி படம் திரையரங்குகளில் வெளியாகி 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தப் படம் குறித்து படத்தின் இயக்குநர் இன்னசி பாண்டியன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, டைரி’ — ஒரு கனவின் முதல் அத்தியாயம். நான்கு ஆண்டுகளுக்குப் பின்… அதே கனவு, புதிய சிறகுகளுடன் என்று தெரிவித்துள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… சூர்யாவின் 47வது படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது? – வைரலாகும் தகவல்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
4 years of #DIARY
‘டைரி’ — ஒரு கனவின் முதல் அத்தியாயம். ❤️
நான்கு ஆண்டுகளுக்குப் பின்…
அதே கனவு, புதிய சிறகுகளுடன்.WESTERN GHATS PICTURES LLP 🌄🎬
வேரிலிருந்து… உலகம் நோக்கி.@westernghatsLLP @radhakrishnanx pic.twitter.com/A91W0WsxJm
— Innasi Pandiyan (@innasi_dir) August 26, 2026
Also Read… Sardar 2: மயில் வீரா.. கார்த்தியின் சர்தார் 2 படத்தின் முதல் பாடல் வெளியானது!